சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நுழையும் ஷிக்கர் தவான் – ஏலத்தில் வாங்கவிருக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள சி.எஸ்.கே நிர்வாகம்

0
11642
CSK to Pick Dhawan in IPL Auction

2022ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்தியாவில் ஐபிஎல் தொடர் அடுத்த வருடம் நடைபெறப்போகிறது என்பதே. மீண்டும் இந்தியாவில் நடைபெறப் போகும் 15ஆவது ஐபிஎல் லீக் தொடரை காண ரசிகர்கள் தற்போது ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கு ஒவ்வொரு அணியும் தங்களுடைய பழைய அணியிருந்து சில வீரர்களை தக்க வைத்திருக்கின்றனர். புதிய அணிகளான லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் தேர்ந்தெடுக்க போகும் (அதிகபட்சமாக மூன்று வீரர்கள்) வீரர்களின் பெயரை கூடிய விரைவில் அறிவிக்க இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து அடுத்த வருடம் ஜனவரி மாதம் மெகா ஏலம் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் குறி வைக்க போகும் வீரர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தங்களுடைய பழைய வீரர்கள் பட்டியலில் இருந்து ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி, மொயின் அலி மற்றும் ருத்ராஜ் கெய்க்வாட் ஆகியோரை தக்கவைத்துள்ளது. இதனை அடுத்து வருகிற ஜனவரி மாதம் நடக்க இருக்கின்ற மெகா ஏலத்தில் ஒரு சில வீரர்களை அந்த அணி வாங்கப் போவதாக தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது.

தற்பொழுது வெளிவந்துள்ள தகவலின் அடிப்படையில் அந்த அணி ஓபனிங் பேட்ஸ்மேன் ஷிகர் தவான், ஸ்பின் பந்து வீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர், ஆல்ரவுண்டர் வீரர் ஷாருக்கான் ஆகியோரை வாங்க குறி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஷிகர் தவான் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு மிக சிறப்பாக விளையாடிய வீரர். இவரை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் தவான் மற்றும் ருத்ராஜ் ஜோடியை நாம் கண்டு களிக்கலாம். சென்னை அணியின் ஆஸ்தான முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் ஸ்பின் பந்து வீச்சில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மிகப்பெரிய அளவில் கைகொடுப்பார்கள். அதுபோலவே ஆல்ரவுண்டர் வீரர் ஷாருக்கான் அதிரடியாக ஆடி பினிஷிங் வேலையை கச்சிதமாக செய்து முடிப்பார்.

- Advertisement -

சென்னை அணி நிர்வாகம் குறி வைத்துள்ள இந்த வீரர்கள் அந்த அணிக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுப்பார்கள். மெகா ஏலத்தில் அந்த அணி திட்டம் போட்டவாறு இவர்களை வெற்றிகரமாக கைப்பற்றுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்