ஐபிஎல் மினி ஏலம் 2024.. இந்த முறை சிஎஸ்கே செய்தது மாஸ்டர் பிளான்.. ஏபி டிவில்லியர்ஸ் பேச்சு

0
6621
CSK

அடுத்த வருடம் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடைபெற்ற முடிவுக்கு வந்திருக்கிறது. இதில் வழக்கம்போல ஆர்சிபி அணியை தவிர மற்ற அணிகள் அனைத்துமே தேவையான அளவிற்கு செயல்பட்டு வீரர்களை வாங்கி இருக்கின்றன.

மிகக்குறிப்பாக ஐபிஎல் தொடரின் இரண்டு பிரதான முக்கிய அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் என இரண்டு அணிகளும் வீரர்களை மிகவும் சுலபமான முறையில் வாங்கி இருக்கின்றன.

- Advertisement -

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அம்பதி ராயுடு இடத்துக்கும், பொதுவான ஒரு வேகப்பந்துவீச்சாளருக்காகவும் ஏலத்திற்கு வந்தது. அவர்கள் கையில் 32 கோடி பணமும் இருந்தது. எனவே இந்த சாதகத்தை வைத்து அவர்கள் தேவைக்கு மேல் சிறப்பாகவே ஏலத்தில் வீரர்களை வாங்கி விட்டார்கள்.

குறிப்பாக அம்பதி ராயுடு இடத்துக்கு ரச்சின் ரவீந்தரா, டேரில் மிட்சல் மற்றும் இளம் வீரர் சமீர் ரிஸ்வி என தரமான மூன்று வீரர்களை வாங்கி விட்டார்கள். ஒரு வேகப்பந்துவீச்சாளருக்கான இடத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டு இருந்த, பேட்டிங்கும் செய்யக்கூடிய சர்துல் தாக்கூரை வெறும் 4 கோடிக்கு வாங்கி விட்டார்கள்.

இந்த நிலையில் நடந்து முடிந்த ஏலத்தில் முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும் அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பேசிய ஏபி.டிவிலியர்ஸ் “சிஎஸ்கே ஐபிஎல் தொடரில் ஒரு ஸ்மார்ட்டான டீம். அவர்கள் ஆரம்பத்தில் இருந்து அப்படித்தான் இருந்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு மிடில் ஆர்டரில் ரவீந்தரா மற்றும் மிட்சல் இருவரும் தேவைப்பட்டார்கள் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

இந்த நியூசிலாந்து வீரர்கள் இரண்டு பேருக்கும் சிறந்த உலகக் கோப்பை இந்த முறை அமைந்திருந்தது. மேலும் இருவருமே இந்தியாவில் சதங்கள் அடித்து இருந்தார்கள். சர்துல் தாக்கூர் அனைத்து வடிவங்களிலும் சிறப்பாக விளையாடக் கூடியவர். அவரை சிஎஸ்கே நான்கு கோடிக்கு வாங்கியதுதான் இந்த வருடத்தின் ஐபிஎல் தொடரில் மிகச்சிறந்தது” என்று ஜாலியாக கூறியிருக்கிறார்!

மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பற்றி பேசிய அவர் “கொல்கத்தா அணிக்கு நல்ல பந்து வீச்சு வரிசை இருக்கிறது. ஆனால் அவர்களுடைய பேட்டிங் வரிசை அப்படி என்று நான் நினைக்கவில்லை. ஸ்ரேயாஸ் நல்ல பேட்ஸ்மேன் ரிங்கு நல்ல பினிஷர். ஆனாலும் அவர்களுடைய பேட்டிங் லைன் ஆப் ஐபிஎல் தொடரை வெல்லக்கூடிய அளவில் இருப்பதாக நான் நினைக்கவில்லை!” என்று கூறியிருக்கிறார்!