சிஎஸ்கே அணியின் குட்டி மலிங்காவின் அறிமுக போட்டியில் இலங்கை அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்!

0
2441

ஆப்கானிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் ஆடி வருகிறது . இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதலாவது போட்டி ஹம்பன்தோட்டாவில் இன்று நடைபெற்றது .

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷஹீதி பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆப்கானிஸ்தான் அணியின் அபார பந்துவீச்சில் இலங்கை அணி துவக்கத்திலேயே விக்கெட்களை இழந்தாலும் அந்த அணியின் அசலங்கா மற்றும் தனஞ்செயா டிசில்வா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 268 ரன்களை எடுத்து அணைத்து விக்கீட்டுகளையும் இழந்தது .

- Advertisement -

இலங்கை அணியின் சரித் அசலங்கா அபாரமாக ஆடி 95 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் இதில் 12 பவுண்டரிகள் அடங்கும் . தனஞ்செயா 59 பந்துகளில் ஆறு பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் . ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் ஃபரூக்கி மற்றும் பரீத் தலா இரண்டு விக்கெட்டுகளையும் அஸ்மத்துல்லா முஜீப் நூர் அஹமத் மற்றும் முகமது நபி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர.

இதனைத் தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் வேகமாக ஆடி இலக்கை நோக்கி முன்னேறியது.அந்த அணியின் துவக்க வீரரான இப்ராஹீம் ஷத்ரான் 11 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களின் உதவியுடன் 98 பந்துகளில் 98 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் . அவருடன் இணைந்து பாடிய ரஹமத் ஷா என்பது பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

மற்ற வீரர்களின் சிறப்பான பங்களிப்பில் ஆப்கானிஸ்தான் அணி 46.5 ஓவர்களில் 267 ரன்களை எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது . ஆப்கானிஸ்தான் அணியின் முகமது நபி 28 பந்துகளில் 27 ரன்களுடனும் நஜிபுல்லா 7 ரன்கள்டனும் களத்தில் இருந்தனர் . இலங்கை அணியின் பந்து வீச்சில் ரஜிதா இரண்டு விக்கெட்டுகளையும் லகிரு குமாரா மற்றும் அறிமுக வீரர் பத்திரனா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

- Advertisement -

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருக்கிறது . ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக பந்து வீசிய இலங்கை அணியின் குட்டி மலிங்கா மதிசா பத்திரனா சர்வதேச போட்டியில் இலங்கை அணிக்காக தனது முதல் போட்டியை இன்று விளையாடினார்.8.5 ஓவர்களை வீசிய அவர் 66 ரண்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக பந்து வீசிய அவர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தாலும் இந்த போட்டி அவருக்கு சிறப்பானதாக அமையவில்லை .

இது அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்வில் முதல் போட்டி என்பதால் இனி வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவார் என்று ரசிகர்களும் விமர்சிகர்களும் கருத்து தெரிவித்தனர். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக அவர் சிறப்பாக செயல்பட்டது தான் இலங்கை அணியில் அவருக்கான இடத்தை பெற்று தந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது .