சென்னை அணி ருத்ராஜுக்கு கேப்டன்ஷிப்பை கொடுக்க முடிவெடுத்தால், இந்த விஷயத்தையும் கண்டிப்பாக செய்தாக வேண்டும் – ஷான் பொல்லாக்

0
1255

இத்தனை ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மகேந்திர சிங் தோனி தலைமை தாங்கி வந்தார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கும் முன் ரவீந்திர ஜடேஜா இந்த ஆண்டு முதல் சென்னை அணியை வழிநடத்துவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து அவருக்கு கேப்டன் பதவியையும் சென்னை அணி நிர்வாகம் கொடுத்தது.

ஜடேஜா தலைமையிலான சென்னை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது. தன்னுடைய ஆட்டத்தில் கவனம் செலுத்த முடியவில்லை எனவே தன்னுடைய கேப்டன் பதவியை மீண்டும் மகேந்திர சிங் தோனிக்கு கொடுக்க ரவீந்திர ஜடேஜா விருப்பம் தெரிவித்தார். அவரது விருப்பத்திற்கு சென்னை அணி நிர்வாகம் சம்மதம் தெரிவித்தது. இதனையடுத்து சென்னை அணியை தற்பொழுது மகேந்திர சிங் தோனி மீண்டும் தலைமை தாங்கி வருகிறார்.

- Advertisement -

ரசிகர்கள் பலருக்கும் இருக்கும் கேள்வி இனிவரும் ஆண்டுகளில் மகேந்திர சிங் தோனிக்கு பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எந்த வீரர் தலைமை தாங்க போகிறார் என்பதுதான். ஷேவாக் உட்பட நிறைய கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் ரசிகர்கள் எம்எஸ் தோனி பின்னர் ருத்ராஜ் கெய்க்வாட் சென்னை அணியை வழிநடத்த சரியான தேர்வாக இருப்பார் என்று கருத்துக் கூறியுள்ளனர்.

ருத்ராஜ் கேப்டன் பொறுப்பை ஏற்றால் இந்த ஒரு விஷயத்தையும் சென்னை நிர்வாகம் செய்தாக வேண்டும்

தென்னாபிரிக்க ஜாம்பவான் கிரிக்கெட் வீரரான ஷான் பொல்லாக் தற்போது இவ்விஷயத்தைப் பற்றி ஒருசில கருத்தை முன்வைத்துள்ளார்.”ருத்ராஜ் இளம்வயது கிரிக்கெட் வீரர். அவர் தற்பொழுது பேட்டிங்கில் மிக அற்புதமாக மெருகேறி வருகிறார். என்னைப் பொறுத்த வரையில் அவருக்கு தற்போது கேப்டன் பதவியை கொடுப்பது சரியான முடிவாக இருக்காது என்று எண்ணுகிறேன்.

- Advertisement -

மகேந்திர சிங் தோனிக்கு பின்னர் அவரது இடத்தில் இருந்து சென்னை அணியை வழிநடத்தும் அளவுக்கு அனுபவம் நிறைய ஒரு கேப்டனுக்கு இருந்தாக வேண்டும். அதனடிப்படையில் தற்பொழுது அவருக்கு கேப்டன் பதவி கொடுப்பது சரியான முடிவாக இருக்காது என்று விளக்கமாக ஷான் பொல்லாக் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் ஒருவேளை சென்னை அணி நிர்வாகம் கேப்டன் பொறுப்பை ருத்ராஜுக்கு கொடுத்தே தீரவேண்டும் என்கிற முடிவுக்கு வந்தால், மகேந்திர சிங் தோனிக்கு இன்னும் ஒரு ஆண்டு விளையாட வாய்ப்பு வழங்க வேண்டும். கேப்டனாக ருத்ராஜ் சென்னை அணியை வழிநடத்தினாலும் அவர் மகேந்திர சிங் தோனியின் கண்பார்வையில், அவர் வழங்கும் ஆலோசனைகளை முறையாக கற்றுக் கொள்ள வேண்டும்.

எம்எஸ் தோனி மற்றும் ருத்துராஜ் இருவரும் இணைந்து அணியை வழிநடத்தும் பட்சத்தில், எம்எஸ் தோனியிடம் இருந்து நிறைய விஷயங்களை ருத்ராஜ் கற்றுக் கொள்வார். அது அவருக்கு வரக்கூடிய ஆண்டுகளில் சென்னை அணியை வழிநடத்த கைகொடுக்கும். எனவே ருத்துராஜ் கேப்டன் பொறுப்பை ஏற்று சென்னை அணியை வழி நடத்தினால், எம் எஸ் தோனியும் அந்த ஆண்டு அவருடன் இணைந்து விளையாடியாக வேண்டும் என்று பொல்லாக் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளார்.