ஐபிஎல்-ல் புது ரெக்கார்டு வைத்த சிஎஸ்கே ; அதிர்ந்தது சேப்பாக்கம்!

0
180
CSK

இந்திய கிரிக்கெட் வாரியம் நடக்கும் டி20 லீக் ஐபிஎல் தொடரில் 16ஆவது சீசனின் ஆறாவது போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது!

இந்த போட்டிக்கான டாசில் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ராகுல் தனது அணி முதலில் பந்து வீசும் என்ற அறிவித்தார். சென்னை அணியில் எந்த வித மாற்றங்களும் செய்யப்படவில்லை. லக்னோ அணியில் ஒரு மாற்றமாக உனட்கட்டுக்கு பதிலாக யாஸ் தாக்கூர் என்ற இளம் வீரர் அறிமுகமானார்.

- Advertisement -

சென்னை அணிக்கு துவக்கம் தர வந்த ருத்ராஜ் மற்றும் கான்வே இருவரும் முதல் ஓவரில் மட்டும் பொறுமை காட்டி விட்டு அடுத்து அதிரடியில் லக்னோ பந்துவீச்சாளர்களை மிரட்ட ஆரம்பித்தார்கள். பவர் பிளே முதல் 6 ஓவர்களில் 79 ரன்களை இந்த ஜோடி குவித்தது.

மிகச் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் 26 பந்துகளில் இந்த தொடரின் இரண்டாவது அரை சதத்தை அடித்தார். 31 பந்துகளை சந்தித்த அவர் மூன்று பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 57 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்த துவக்க ஆட்டக்காரர் கான்வே 29 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 47 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மூன்றாவது விக்கட்டுக்கு அனுப்பப்பட்ட சிவம் துபே பதினாறு பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 27 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மொயின் அலி 13 பந்துகளில் மூன்று பவுண்டரிகளுடன் 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ரவீந்திர ஜடேஜா 3 ரன்களில் வெளியேறினார்.

இவர்களுக்கு நடுவில் வந்த அம்பதி ராயுடு கடைசியில் தன் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 14 பந்துகளை சந்தித்த அவர் 27 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவருக்கு வந்த மகேந்திர சிங் தோனி தான் சந்தித்த முதல் இரண்டு பந்துகளில் இரண்டு சிக்ஸ்ர்களை அடித்து மூன்றாவது பந்தில் ஆட்டம் இழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட்டுகள் இழப்பிற்கு சென்னை அணி 217 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இந்த ஆட்டத்தில் 200 ரன்களை கடந்ததின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் அதிக முறை 200 ரன்களை கடந்த அணி என்ற சாதனையை படைத்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக ஐபிஎல் தொடரில் 200 ரன்களை 24 முறை சென்னை அணி கடந்திருக்கிறது. அனைவருக்கும் அடுத்த இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 22 முறை 200 ரன்களை அடித்திருக்கிறது. மூன்றாவது இடத்தில் பஞ்சாப் அணி 17 முறை 200 ரன்களை அடித்து இருக்கிறது.