இன்று துவங்கும் 19ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் குறிப்பிட்ட காலம் தோனி விளையாட மாட்டார் என சிஎஸ்கே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
கடந்த ஆண்டு சிஎஸ்கே அணி தொடர்ந்து தோனியை தக்கவைத்து மினி ஏலத்திற்கு வந்து புதிய அணியை அமைத்தது. இந்த நிலையில் அவர் எந்த இடத்தில் விளையாடுவார்? இல்லை இம்பேக்ட் பிளேயராக வருவாரா? என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வந்தது.
இந்த நிலையில் தோனி இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் தொடர்ந்து சிஎஸ்கே அணியில் இருப்பார், அதே சமயத்தில் அவர் சிஎஸ்கே அணிக்காக களம் இறங்கி விளையாட மாட்டார், ஆனால் மெண்டராக அணியில் செயல்படுவார் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி வந்தார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக தோனி தனது கடைசி ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார் என விளம்பரம் செய்யப்பட்டு வந்ததால், அவரும் தொடர்ந்து ஓய்வு பெறாமல் விளையாடியதால், அவர் குறித்தான பரபரப்புகள் மற்றும் எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே குறைத்துவிட்டது என்பது முக்கியமானது.
இந்த நிலையில் இன்று சிஎஸ்கே அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக காயத்தின் காரணமாக தோனி முதல் 2 வாரங்கள் ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு இல்லை என்று கூறியிருக்கிறது. அதற்குப் பிறகு அவர் விளையாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : விராட் கோலி இல்லை.. 2026 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு மிகவும் ஈர்க்கக்கூடிய வீரர் இவர்தான் – ஆகாஷ் சோப்ரா கணிப்பு
இது குறித்து சிஎஸ்கே வெளியிட்டுள்ள அறிக்கையில் “அதிகாரப்பூர்வ அறிக்கை. தற்போது தோனி கால் தசைப்பிடிப்பு காயத்திற்கான மறு வாழ்வில் இருந்து வருகிறார். இதன் காரணமாக 2026 ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு வார கால போட்டிகளை தவறவிடுவதற்கு வாய்ப்பு உள்ளது. விரைவில் குணமடையுங்கள் தல!” என்று கூறப்பட்டுள்ளது.