19 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று நடைபெற உள்ள நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று முதல் போட்டியில் விளையாட உள்ளன.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆகாஷ் சோப்ரா இந்த போட்டி குறித்து சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19 ஆவது ஆண்டின் முதல் போட்டி இன்று நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாட உள்ள நிலையில் கடந்த ஆண்டை விட பெங்களூர் அணி இன்னும் பலமாகவே காணப்படுகிறது. ஏறக்குறைய முதல் சீசனில் விளையாடிய வீரர்கள் அனைவரும் இருக்க, வெங்கடேஷ் ஐயரும் தற்போது பெங்களூர் அணியில் இணைந்திருப்பது அணிக்கு பெரிய பலத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அதுபோக கடந்த டி20 உலக கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவை கதி கலங்க வைத்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான ஜேக்கப் பெத்தல் அணியில் இணைந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் ஆகாஷ் சோப்ரா இந்த போட்டி குறித்து சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “இந்த போட்டியை பொறுத்தவரை படிக்கலை களம் இறக்குவீர்களா அல்லது வெங்கடேஷ் ஐயரை களம் இறக்குவீர்களா? என்பதே தற்போது முதல் கேள்வியாக இருக்கும். ஏனென்றால் இந்த அணிக்கு வெங்கடேஷ் ஐயர் மீது ஆர்வம் உள்ளது. கடந்த ஆண்டு கேகேஆர் 23.75 கோடி ரூபாய்க்கு எடுத்தபோது அதற்கு முந்தைய ஏலம் வரை ஆர்சிபி சென்றது. அதேபோல கேப்டன் பட்டிதாரும் இவரும் மத்திய பிரதேச அணிக்காக விளையாடுகிறார்கள் என்பதால் சிறிய நெருக்கம் இருக்கிறது.
மேலும் வெங்கடேஷ் ஐயர் பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் கலக்கும் வீரராக இருப்பதால் இந்த அணியில் அவர் மிகவும் ஈர்க்கக்கூடிய வீரராக இருக்கிறார். மேலும் தேவ்தத் படிக்கல் எந்த தவறும் செய்யாத வீரராக இருக்கிறார். இதனால் வெங்கடேஷ் ஐயருக்கு பதிலாக முதலில் இவருடனே ஆர்சிபி தொடங்கினால் நல்லது என்ற கருதுகிறேன்” என்று அவர் பேசி இருக்கிறார்.






