சிஎஸ்கே காவியாவுக்கு பதிலடி. 2ஸ்டார் பிளேயர்களை குறைந்த விலையில் தட்டி தூக்கியது.. ஐபிஎல் ஏலம்!

0
1791
CSK

ஐபிஎல் ரசிகர்களின் பரபரப்பான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று துபாயில், அடுத்த வருடம் நடக்க இருக்கும் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடைபெற்று வருகிறது.

இந்த ஏலத்தின் முதல் சுற்று முடிவடைந்த நிலையில் இரண்டாவது சுற்று ஆரம்பித்தது. இரண்டாவது சுற்றில் மிக முக்கியமான வீரர்கள் வர இருக்கின்ற காரணத்தினால், இந்த சுற்று மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் சுற்றில் டிராவிஸ் ஹெட்டுக்கு ஹைதராபாத் அணியுடன் போட்டியிட்ட நிலையில், அவரை வாங்க முடியாமல் பின் வாங்கியது.

இந்த நிலையில் இரண்டாவது சுற்றில் நியூசிலாந்து அணியின் இளம் ஆல் ரவுண்டர் ரச்சின் ரவீந்தரா ஏலத்திற்கு அடிப்படை விலையான ₹50 லட்சத்திற்கு வந்தார்.

இவருக்கு எடுத்ததும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் கையை உயர்த்தியது. இந்த நிலையில் மீண்டும் தலையிட்ட ஹைதராபாத் அணி முட்டுக்கட்டை போட்டது.

- Advertisement -

ஏலத்தில் இரு அணிகளும் தொடர்ந்து சென்ற பொழுது இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு கோடிக்கு சென்றது. அந்த நிலையில் இருந்து ஹைதராபாத் விலகிக் கொண்டது.

இந்த இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் எளிதாக ரச்சின் ரவீந்திராவை வாங்க நினைத்த நிலையில், உள்ளே வந்த பஞ்சாப் சிறிது நேரம் விலையை உயர்த்தியது. இறுதியாக ரச்சின் ரவீந்தராவை சென்னை சூப்பர் கிங்ஸ் 1.80 கோடிக்கு குறைந்த விலையில் அள்ளியது.

இதற்கு அடுத்து சர்துல் தாக்கூர் ஏலத்திற்கு வந்தார். ஆரம்ப முதலே அவரை வாங்குவதற்கு விருப்பம் காட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் களத்தில் இறங்கியது. இந்த முறையும் அதற்கு இடையூறு செய்யும் விதமாக ஹைதராபாத் குறுக்கே வந்தது.

ஆனால் இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் விட்டு கொடுக்காமல் ஏலத்தில் தொடர்ந்து சென்று நான்கு கோடி ரூபாய்க்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் இருந்து சர்துல் தாக்கூரை வாங்கி கலக்கி இருக்கிறது.

ரச்சின் ரவீந்திர மற்றும் சர்துல் தாக்கூர் இருவரையும் வெறும் 5.80 கோடிக்கு வாங்கி வழக்கம் போல் ஏலத்தில் தாங்களே ராஜா என்பதை சென்னை சூப்பர் கிங்ஸ் நிரூபித்து இருக்கிறது!