பிளே ஆப்சில் ஒரு காலை வைத்தது சிஎஸ்கே ; சேப்பாக்கத்தில் டெல்லிக்கு நிமிர விடாமல் அடி!

0
1324
CSK

இன்று ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. சென்னை அணிக்கு இந்த முறை துவக்க ஆட்டக்காரர்களிடம் இருந்து சரியான பங்களிப்பு வரவில்லை. ருத்ராஜ் 24, கான்வே 10 ரன்களில் வெளியேறினார்கள்.

- Advertisement -

அடுத்து களம் இறங்கிய ரகானே 21, மொயின் அலி 7, சிவம் துபே 25, அம்பதி ராயுடு 23, ரவீந்திர ஜடேஜா 21, மகேந்திர சிங் தோனி 20, தீபக் சகர் 1, துஷார் தேஷ்பாண்டே 0 என ரன்கள் எடுத்த 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு சென்னை 167 ரன்கள் எடுத்தது. மார்ஷ் மூன்று ஓவர்கள் பந்துவீசி 18 ரன்கள் தந்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

சுழற் பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளத்தில் இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. வார்னர் 0, சால்ட் 17, மார்ஷ் 5 என அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த மணிஷ் பாண்டே மற்றும் ரூசோ ஜோடி 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்தது. ஆனாலும் அடுத்தடுத்து மணிஷ் பாண்டே 27, ரூஷோ 35 ரன்களில் வெளியேற டெல்லிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

- Advertisement -

இதற்கு அடுத்து களத்திற்கு வந்த அக்சர் படேல் 21, ரிபல் படேல் 10, லலித் யாதவ் 12, குல்தீப் யாதவ் 0, அமான் கான் 2 ரன்கள் எடுக்க, நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் டெல்லி அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் பதிரனா நான்கு ஓவர்களுக்கு 37 ரன்கள் தந்து நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தற்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ஆட்டங்களில் ஆறு வெற்றி மற்றும் ஒரு டிராவுடன் 15 புள்ளிகள் எடுத்து புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. இந்தப் புள்ளிகளே பிளே ஆப் சுற்றுக்கு போதுமானதாக கூட இருக்கலாம். ஆனால் எஞ்சி இருக்கும் இன்னும் இரண்டு போட்டியில் ஒன்றை வென்றால் கூட, முதல் இரண்டு இடங்களுக்குள் வந்து, சென்னையில் நடைபெறும் குவாலிபயர் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது!