ஐபிஎல் 2024.. சிஎஸ்கே வீரர்களின் சம்பள பட்டியல்.. தோனியை தாண்டிய 3 வீரர்கள்

0
16328

ஐபிஎல்லில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாகத் திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேவையான வீரர்களை எடுத்து அணியை பலமாக கட்டமைத்துள்ளது. தனது திட்டமிடலில் எப்போதும் தெளிவான நுட்பத்தைக் கொண்டிருக்கும் தோனி அணி வீரர்களை எடுப்பதிலும் மிகுந்த கவனத்துடன் செயல்படுவார்.

அதே நேரத்தில் மிக அதிக விலைக்குச் செல்லாமல், முடிந்தவரை நியாயமான தொகையிலேயே சென்னை அணி ஏலத்தில் எடுக்க முயற்சிக்கும். எனவே சென்னை அணி வீரர்களின் சம்பள பட்டியலை இக்கட்டுரையில் காணலாம். அதே நேரத்தில் எம்.எஸ். தோனியின் சம்பளத்தை விடவும் இருவீரர்கள் அதிகமாக பெறுகின்றனர் அவர்களைப் பற்றியும் காணலாம்.

- Advertisement -

அஜய் மண்டல் மற்றும் ஷேக் ரஷித் ஆகியோர் அவர்களது அடிப்படை விலையான 20 லட்சத்திற்குக் கடந்த 2023ஆம் ஆண்டு சென்னை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு தற்போது வரை ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த சீசனில் விளையாடுவார்களா என எதிர்பார்க்கலாம்.

சென்னை அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் பதிரானா இவர் 2022ஆம் ஆண்டு ஆடம் மில்னேவுக்கு பதிலாக சேர்க்கப்பட்டு கடந்த சீசனில் சிறப்பாக பந்து வீசி 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனால் இவரை அடிப்படை விலையான 20 லட்சத்திற்கே சென்னை அணி இந்த சீசனில் தக்க வைத்துக் கொண்டது. வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஆன சிமர் ஜித் சிங் இவரையும் அடிப்படை விலையான 20 லட்சத்திற்கே சென்னை அணி வாங்கியது. 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற சீசனில் ஆறு போட்டியில் விளையாடி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

சென்னை அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளரான துஷார் தேஷ் பாண்டே, கடந்த சீசனில் காயம் காரணமாக விளையாடாத வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் சௌத்ரி மற்றும் ஹைதராபாத்த்தைச் சேர்ந்த இடது கை விக்கெட் கீப்பர் பேட்டர் அவனிஷ் ராவ் ஆரவெல்லி ஆகியோரையும் அடிப்படை விலையான இருபது லட்சத்திற்கே வாங்கியது.

- Advertisement -

இந்திய அணியின் மூத்த வீரரான ரகானேவை 50 லட்சத்திற்கும், 2023 ஆம் ஆண்டு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆல்ரவுண்டர் நிஷாந்த் சித்துவை 60 லட்சத்திற்கும் சென்னை அணி வாங்கியது. சென்னை அணியின் முக்கிய சுழற்பந்துவீச்சாளரான தீக்ஷனாவை 70 லட்சத்திற்கும், நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான கான்வேவை ஒரு கோடிக்கும் வாங்கியது. வலது கை லெக் ஸ்பின்னரான பிரசாந்த் சோலங்கியை 1.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தாலும், இரு போட்டிகளில் விளையாடி இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அதன் பிறகு இவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ராஜ்வர்தன் ஹங்கர்கேகரை 1.50 கோடிக்கும், நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரட்சின் ரவீந்திராவை 1.80 கோடிக்கும் எடுத்தது. இவர் கடந்த உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடி அனைவரும் கவனத்தையும் ஈர்த்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நியூசி அணியின் சுழற் பந்துவீச்சாளர் சான்ட்னரை 1.90 கோடிக்கும், வங்காளதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை 2 கோடிக்கும், இந்திய அணியின் ஆல் ரவுண்டர்களான சிவம் தூபே மற்றும் சர்துல் தாகூர் ஆகியோரை 4 கோடிக்கும், சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் கெய்க்வாட்டை 6 கோடிக்கும் எடுத்தது.

இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மொயின் அலியை எட்டு கோடிக்கும், தற்போதைய சீசனில் அறிமுகமாக உள்ள சமீர் ரிஸ்வி 8.40 கோடிக்கும் சென்னை அணி எடுத்தது. சமீர் ரிஸ்வி இந்திய அணியில் அறிமுகமாக விட்டாலும், உள்ளூர் கிரிக்கெட்டில் இந்த இளம் வீரர் அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார்.

சென்னை அணியின் கேப்டன் எம் எஸ் தோனியை 2008ஆம் ஆண்டு 12 கோடிக்கு எடுத்துள்ள சென்னை அணி நியூசி அணியின் ஆல் ரவுண்டர் டேரி மிட்சலை 14 கோடிக்கும், இந்தியா ஆல் ரவுண்டர் தீபக் சகார் 14 கோடிக்கும், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை 16 கோடிக்கும் எடுத்துள்ளது. இவர்கள் மூவரின் சம்பளமும் சென்னை அணியின் கேப்டன் தோனியை விட அதிகமாகும். ஒருவேளை மகேந்திர சிங் தோனி ஏலத்திற்கு வந்தால் ஐபிஎல் வீரர்களிலேயே அதிக விலைக்கு தோனி வாங்கப்படலாம் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.