ஐபிஎல் 2025

வன்ஸ் பேடி ஆடாமல் ஹூடா ஆடுவது ஏன்.. கடைசி நேரத்தில் என்ன நடந்தது?.. சிஎஸ்கே வெளியிட்ட தகவல்

இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் சிஎஸ்கே ஆர்சிபி அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்பொழுது நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் சிஎஸ்கே இளம் வீரர் வன்ஸ் பேடி விளையாட அதற்கான காரணம் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

கடந்த ஆண்டு இரு அணிகளும் மோதிக்கொண்ட கடைசிப் போட்டிக்கு அடுத்து இரு அணி ரசிகர்களுக்கும் இடையே சமூக வலைதளத்தில் மிகப்பெரிய பிரச்சினைகள் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஆர்சிபி அணி சிஎஸ்கே அணியை முதல் போட்டியில் சேப்பாக்கத்தில் வைத்து வென்று இருந்தது. எனவே இந்த போட்டிக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இரு அணிகளில் ஏற்பட்ட மாற்றம்

இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. ஆர் சி பி அணியில் இந்தப் போட்டிக்கும் பில் சால்ட் விளையாடவில்லை. இதையடுத்து இன்னொரு பேரிழப்பாக சிறப்பான பவுலிங் ஃபார்மில் இருந்து வரும் ஹேசில்வுட் விளையாடவில்லை. அந்த இடத்தில் லுங்கி நிகிடி விளையாடுகிறார்.

அதே சமயத்தில் இன்றைய போட்டியில் வன்ஸ் பேடி விளையாடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் அந்த இடத்தில் தீபக் ஹூடா விளையாடுகிறார். மேலும் நாதன் எல்லீஸ்க்கு இந்த போட்டியிலும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. தொடர்ந்து இந்த போட்டியிலும் பதிரணாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

வன்ஸ் பேடி விளையாடாதது ஏன்?

இந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய இளம் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் வன்ஸ் பேடி பயிற்சியின்போது கடைசி நேரத்தில் காயமடைந்ததாகவும், இதன் காரணமாகவே அவரை துரதிஷ்டவசமாக இந்த போட்டியில் விளையாட வைக்க முடியவில்லை எனவும் பிளேயிங் லெவன் லிஸ்ட் வெளியிடப்பட்டு இருக்கிறது.

இதையும் படிங்க : சும்மா பேசாதீங்க.. இதே சிஎஸ்கே டீம் டாப்-4ல இருந்திருக்கும்.. ஆனா 3 டைம் இது மிஸ் ஆயிடுச்சு – மைக் ஹசி பேட்டி

தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பிளேயிங் லெவன் பட்டியலில் முதலில் வன்ஸ் பேடி பெயர் எழுதப்பட்டிருக்கிறது. பிறகு அந்த பெயர் அடிக்கப்பட்டு தீபக் ஹூடா பெயர் எழுதப்பட்டது தெரிகிறது. அவர் கடைசி நேரத்தில் காயம் அடைந்ததால் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் அந்த வீரரை விளையாட வைக்க கூடாது என இப்படியான தகவல்களை பரப்பி விடுவதாக சமூக வலைதளத்தில் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

- Advertisement -
Published by

Recent Posts