நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடும் சிஎஸ்கே அணி தான் அதன் வரலாற்றில் மோசமான அணியென அனைவரும் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த அணியும் முதல் நான்கு இடங்களில் புள்ளி பட்டியலில் இருந்திருக்க முடியும் என பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி தெரிவித்திருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மிகவும் சுமாரான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக 10 போட்டிகளில் 7 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் நான்கு புள்ளிகள் உடன் பரிதாபமாக இருக்கிறது.
சிஎஸ்கே வரலாற்றில் முதல் முறை
இந்த முறை ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தக்க வைத்திருந்த பல வரலாற்று சாதனைகள் எதிரணிகளால் தகர்க்கப்பட்டு கொண்டிருக்கின்றன. மிகக் குறிப்பாக சிஎஸ்கே அணிக்கு சேப்பாக்கம் மைதானம் கோட்டை என கூறுவார்கள். ஆனால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மட்டுமே தொடர்ந்து 5 போட்டிகளை தற்போது சிஎஸ்கே அணி தோற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணி இதுவரையில் ஒரு தொடர் முடியும் போது புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது கிடையாது. இந்த நிலையில் தற்போது இருக்கும் சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் ஐபிஎல் தொடரை முடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. எனவே இந்த வரலாற்று சோகம் நடைபெறாமல் தவிர்க்க வேண்டிய கட்டாயம் தற்பொழுது சிஎஸ்கே அணிக்கு ஏற்பட்டு இருக்கிறது.
முதல் நான்கு இடங்களில் இருந்திருப்போம்
இதுகுறித்து மைக் ஹசி கூறும்பொழுது “நாங்கள் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறோம் என்கின்ற காரணத்தினால் மொத்த வீரர்களையும் தூக்கி எறிந்து விட மாட்டோம். இந்த சீசனில் நாங்கள் வென்று இருக்கக்கூடிய மூன்று ஆட்டங்கள் இருந்தது. இது மட்டும் சரியாக நடந்திருந்தால் நாங்கள் முதல் நான்கு இடங்களில் இருந்திருப்போம். இந்த மூன்று போட்டியிலும் வெற்றி வித்தியாசம் பெரிதானது கிடையாது”
இதையும் படிங்க : ஸ்டெயின் இல்ல.. 3 வடிவ கிரிக்கெட்டில்.. இந்த 4 பவுலர்கள ஆட கஷ்டப்பட்டேன் – விராட் கோலி கருத்து
“சில வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஒரு நிரந்தர வாய்ப்பை பெறுவதற்கு இது சிறந்த சூழ்நிலையாக இருக்கிறது. அவர்கள் இதைப் பயன்படுத்தி சிறப்பாக விளையாடினால் எதிர்காலத்தில் அணியில் நிரந்தர இடத்தை பிடித்துக் கொள்ள முடியும். எங்கள் அணியிலும் அப்படி சில இளம் வீரர்கள் இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்






