ரஞ்சி கோப்பையில் தொடர்ந்து இரண்டாவது சதம் கவனத்தை ஈர்க்கும் சிஎஸ்கே அணியின் இளம் நட்சத்திரம் !

0
6766
nishant sindhu shaik rasheed

2022-23 ஆம் ஆண்டிற்கான ரஞ்சிக் கோப்பை போட்டிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன . இந்த வருடத்திற்கான ரஞ்சிப் போட்டிகளில் முதல் இரண்டு சுற்று போட்டிகள் முடிவடைந்து நிலையில் தற்போது மூன்றாவது சுற்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்தப் போட்டிகளில் ஐபிஎல் அணிகளுக்காக தேர்வு செய்யப்பட்ட பல இளம் வீரர்களும் திறமையாக ஆடி வருகின்றனர் .

கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்திற்கு பின் நேற்றுமுதல் ரஞ்சி டிராபியின் மூன்றாம் சுற்று போட்டிகள் துவங்கியது.இதில் ஒடிசா மற்றும் ஹரியானா அணிகளுக்கிடையேயான போட்டியில் இந்திய அண்டர் 19 ஸ்டார் நிஷாந்த் சிந்து அபாரமாக ஆடி சதம் அடித்தார் . இவர் 215 பந்துகளில் 142 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார் . இதில் 21 பௌண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.கடந்த வருடம் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற 19 வயது உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக சிறப்பாக ஆடி ஆட்டநாயகன் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது .

இவர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ரஞ்சிப் போட்டிகளில் அடிக்கும் இரண்டாவது சதம் இதுவாகும் . இதற்கு முன் நடைபெற்ற பரோடா அணிக்கு எதிரான ஆட்டத்திலும் இவர் சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது . அந்தப் போட்டியில் 100 பந்துகளில் 110 ரன்கள் அடித்திருந்தார் . இவர் சதம் அடித்ததற்கு பின்பு தான் 2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் கொச்சினில் நடைபெற்றது .

இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை 60 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தனர் . மிடில் ஆர்டர் பேட்ஸ்மன் மற்றும் இடது கை சுழற் தந்து வீச்சாளர் ஆவார் . சதம் அடித்தது மட்டுமல்லாது அந்த போட்டியில் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தவர் .

சிஎஸ்கே அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் நேற்று தொடங்கிய ரஞ்சிப் போட்டியில் ஒடிசா அணிக்கு எதிராக தனது முதல் தரப் போட்டிகளில் இரண்டாவது சதத்தையும் பதிவு செய்தார் . இவர் ஒரு ஆல் ரவுண்டராக இருப்பதால் சென்னை அணிக்கு ஆடுவதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது .

முதல் நான்கு இடங்களில் ஆடக்கூடிய பேட்ஸ்மேன இவர் .அம்பட்டி ராயுடுவுக்கு பதிலாக டாப் ஆர்டரில் சிஎஸ்கே அணி பயன்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் . இந்த வருட ஏலத்தில் சிஎஸ்கே அணி அதிகமான ஆல் ரவுண்டர்களை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது .