சிஎஸ்கே பாயிண்ட்ஸ் டேபிளில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது; 12 வருட வரலாற்றை மாற்றி சேப்பாக்கத்தில் வைத்து மும்பையை சம்பவம் செய்த சிஎஸ்கே!

0
2346
CSK

இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுவதில் முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக்கொண்டன!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுக்க, திலக் வர்மா இடம்பெறாத காரணத்தால் கேமரூன் கிரீன் மற்றும் இசான் கிஷான் இருவரும் ஆட்டத்தை தொடங்க மூன்றாவது இடத்தில் ரோகித் சர்மா வந்தார்.

- Advertisement -

மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக கிரீன் 6, இஷான் கிஷான் 7, ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்கள். இவர்களுக்கு அடுத்து சூரியகுமார் மற்றும் வதேரா ஜோடி சேர சூரியகுமார் 26 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

ஒரு முனையில் மிகச் சிறப்பாக விளையாடிய வதேரா அரைசதம் அடித்து 64 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மற்றொரு முனையில் ஸ்டப்ஸ் 20, டேவிட் 2, அர்ஷத் கான் 1, ஆர்ச்சர் 3, சாவ்லா 2 ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி எட்டு விக்கட்டுகள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. மிகச் சிறப்பாக பந்து வீசிய பதிரனா நான்கு ஓவர்களுக்கு 15 ரன்கள் கொடுத்து மூன்று விக்கட்டுகள் வீழ்த்தினார்.

எளிய இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணிக்கு 15 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ருத்ராஜ் அதிரடி துவக்கம் தந்து சாவ்லா பந்தில் வெளியேறினார். ரகானே 21 ரன் அம்பதி ராயுடு 12 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய கான்வே 44, சிவம் துபே 26, தோனி 2 என ரன்கள் எடுக்க சென்னை அணி 17.4 ஓவர்களில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் நான்கு ஓவர்கள் பந்துவீசி 25 ரன்கள் தந்து இரண்டு விக்கட்டுகளை பியூஸ் சாவ்லா வீழ்த்தினார்.இந்த வெற்றியின் மூலம் 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் மும்பையை வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்றியது சென்னை.

மொத்தமாக 11 ஆட்டங்களில் விளையாடி உள்ள சென்னை அணிக்கு இது ஆறாவது வெற்றியாகும். இதன் மூலம் 13 புள்ளிகள் உடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை சென்னை அணி பிடித்து அசத்தியிருக்கிறது. இன்னும் மூன்று ஆட்டங்களில் இரண்டை வென்றாலும் அல்லது ஒரு ஆட்டத்தை வென்றாலும் கூட சென்னை அணிக்கு ப்ளே ஆப்ஸ் வாய்ப்பு இருக்கிறது என்று நம்பலாம். பத்தாவது ஆட்டத்தில் விளையாடிய மும்பைக்கு இது ஐந்தாவது தோல்வி ஆகும்!