“நான் கஷ்டப்பட்டப்ப சிஎஸ்கே உதவியிருக்கு.. அதுக்காக இந்த வருஷம் ஒன்னு பண்ண போறேன்!” – சர்துல் அதிரடி பேட்டி!

0
1178
Shardul

இந்த மாதத்தில் சில நாட்களுக்கு முன்பாக துபாயில் நடந்து முடிந்த 17வது சீசன் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன் அணிகள் மிகச் சிறப்பாக செயல்பட்டு, தங்களுக்குத் தேவையான சரியான வீரர்களை வாங்கி மேலும் பலமாகி இருக்கின்றன.

இந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடந்து முடிந்த மினி ஏலத்தில், ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய அனுபவம் கொண்ட சர்துல் தாக்கூரை ஏலத்தில் வாங்கியது.

- Advertisement -

இவரை ஏலத்தில் வாங்கிய நொடியே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய பலம் ஏலத்தில் வந்துவிட்டது. இவர் எப்படியும் பத்து கோடி ரூபாய்க்கு ஏலம் போவார் என்று அனைவரும் நினைத்திருந்தார்கள். அந்த நிலையில் இவர் பெரும் நான்கு கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கிடைத்தார்.

இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்து தாங்கள் வாங்க வேண்டிய மிக முக்கியமான அம்பதி ராயுடுவின் இடத்துக்கு டேரில் மிட்சலை வாங்க செலவு செய்ய முடிந்தது. மேலும் அதே இடத்துக்கு ஒரு இந்திய இளம் வீரரை சமீர் ரிஸ்விக்கு 8.40 கோடி கொடுத்தும் வாங்க முடிந்தது. இப்படி இவரை வாங்கியதுமே சென்னை அணிக்கு நிறைய அனுகூலங்கள் ஏற்பட்டது.

சர்துல் தாக்கூரை பொறுத்தவரை யார் என்ன சொன்னாலும் தன்னுடைய சிந்தனையில் தனித்து செயல்படக்கூடிய ஒரு வீரராகவே இருந்து வந்திருக்கிறார். அவரை ஒரு கேப்டன் பயன்படுத்திக் கொள்வது என்பது மிகவும் நுட்பமானது. இந்த வேலையை இதுவரையில் மிகச் சரியாக செய்தவர் மகேந்திர சிங் தோனி மட்டும்தான்.

- Advertisement -

பந்துவீச்சில் மொத்தம் 20 ஓவர்களில் இவருக்கு சரியான இடம் எதுவோ அந்த இடத்தில் கொண்டு வந்து, அணிக்கு திருப்புமுனைகளை மகேந்திர சிங் தோனி பெற்றுக் கொள்வார். மேலும் அணியின் வெற்றியில் சர்துல் பங்களிப்பும் இருக்கும். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட்டு அவர் வெளியே சென்ற பிறகு, பழையபடி தாக்கம் மிகுந்தவராக அவரைப் பார்க்க முடியவில்லை.

மேலும் சர்துல் தாக்கூர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய பொழுது 2018 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பந்துவீச்சில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி, அந்த அணிக்கு அதிக விக்கெட் வீழ்த்தியவராக வந்திருக்கிறார்.

இந்த நிலையில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை வாங்கி இருப்பது குறித்து பேசி உள்ள அவர் “சிஎஸ்கே எனக்கு நிறைய முறை ஆதரவளித்திருக்கிறது.எனக்கு நிறைய கடினமான நேரங்கள் இருந்திருக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் அவர்கள் என்னை ஆதரித்து இருக்கிறார்கள். நான் சிஎஸ்கே அணிக்கு 2018 மற்றும் 21 ஆம் ஆண்டுகளில் அதிக விக்கெட் எடுத்திருக்கிறேன். இந்த முறை மீண்டும் நான் சிஎஸ்கே அணிக்காக அதிகம் விக்கெட்டுகள் எடுப்பேன்!” என்று கூறியிருக்கிறார்!