சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தன் மீதான விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதாகவும், அதே சமயத்தில் தான் ஐபிஎல் தொடருக்கு எந்தவித திட்டமும் இல்லாமல் வரவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே ஏலக்குழு ஸ்டீபன் பிளமிங் தலைமையில் மிகவும் மோசமான முறையில் செயல்பட்டது. அதனுடைய பாதிப்பை இந்த ஆண்டு மினி ஏலத்தாலும் சரி செய்ய முடியவில்லை. சிஎஸ்கே தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
இதுகுறித்து பிளமிங் பேசும்போது “தற்போது எங்கள் அணியில் நாங்கள் அதிக வீரர்களை மாற்றி இருப்பது ஒரு சவாலான விஷயம். மற்ற அணிகள் ஒரே வீரர்களுடன் ஒரு சீசன் முழுவதும் விளையாடி வருகின்றன. இந்த நிலையில் நாங்கள் நிலை பெறுவதற்கு கொஞ்சம் காலம் தேவை. இதை நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம். இந்த செயல் முறையை செய்ய முயற்சி செய்து வருகிறோம்”
“மேலும் எங்களுக்கு நம்பிக்கையும், அந்த நம்பிக்கையை பெறுவதற்கு கொஞ்சம் வெற்றிகளும் தேவைப்படுகிறது. ஆனால் நாங்கள் வெற்றிக்கு வெகு தொலைவில் இல்லை. இதனால் நாங்கள் கடினமாக உழைக்கிறோம் என்பது உண்மையாகிறது. அதே சமயத்தில் எங்கள் மீதான விமர்சனங்கள் நியாயமே. நாங்கள் முன்னேறுவதற்கு ஒரு வழியை கண்டுபிடிக்க வேண்டும்”
” விமர்சனங்கள் என்பது ஒருவர் சரியாக செயல்படாத பொழுது வரக்கூடியது. அது எப்பொழுதும் இயல்பான ஒரு பகுதியே. நான் விமர்சனங்களை ஏற்றுக் கொள்கிறேன். அதே சமயத்தில் நான் எந்த விதமான திட்டமும் இல்லாமல் ஐபிஎல் தொடருக்கு வரவில்லை”
இதையும் படிங்க : அபிஷேக்கை விட சூரியவன்சிதான் சிறந்தவன்.. அந்த பையன பாராட்ட வேண்டியது என் கடமை – வீரேந்தர் சேவாக் கருத்து
” நான் வெளியில் இரண்டு அணிகளுக்கு பயிற்சியாளராக இருக்கிறேன். அவர்களுக்கும் ஏலத்தில் அமர்கிறேன். எதற்காக உலகெங்கும் இருக்கும் திறமையான வீரர்கள் பற்றி அறிகிறேன். அது ஐபிஎல் தொடருக்கும் பயன்படுகிறது. ஆனால் முன்பு எங்களுக்கு விளையாடும் முறையில் ஒரு திட்டம் இருந்தது. எங்களுக்கு கொஞ்சம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் இருந்தது. ஆனால் இப்பொழுது அது மாறிவிட்டது. எனவே அதற்கேற்ற வகையில் நாங்கள் மாறிக்கொண்டு அணியை உருவாக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.