தொடர் தோல்விகளுக்கு இதுவே காரணம் – சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் விளக்கம்

0
484
Stephen Fleming CSK

கடந்த ஆண்டு தொடரின் ஆரம்பம் முதல் இறுதி வரை மிக சிறப்பாக விளையாடி கோப்பையை வென்ற நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்பொழுது நடப்பு ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து தோல்விகளை பெற்று அதன் ரசிகர்களை ஏமாற்றி வருகிறது.

அடுப்பை ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி கண்டது. பின்னர் இரண்டாவது போட்டியில் லக்னோ அணியும் சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

- Advertisement -

பின்னர் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் பஞ்சாப் அணி சென்னை அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. நேற்று நடந்த முடிந்த நான்காவது ஆட்டத்தில் ஐதராபாத் அணி சென்னை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தற்போது சென்னை அணி உள்ளது.

சென்னை அணி கொடுத்து பேசியுள்ள சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியால் எதிரணிக்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்க முடியவில்லை. நான்கு போட்டிகளில் சென்னை அணி தோல்வியை தழுவி இருந்தாலும் 4 போட்டியிலும் நெருக்கமான ஆட்டம் அமையவில்லை. அதுமட்டுமின்றி அனைத்து துறையிலும் சில முன்னேற்றங்களை நாங்கள் செய்ய வேண்டியிருக்கிறது என்றும் கூறியுள்ளார்

சென்னை அணி வீரர்கள் அனைவரும் அனைத்து துறையிலும் முன்னேற வேண்டும். சென்னை அணியில் இனி அடுத்தடுத்த போட்டிகளில் மாற்றங்கள் நிகழலாம். வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தவறுகளை திருத்திக் கொண்டு, அனைத்து துறையிலும் இனி சிறப்பாக விளையாடினால் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற முடியும் என்பதே நிதர்சன உண்மை.

- Advertisement -

நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதனுடைய 5வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக வருகிற செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 12ம் தேதி) விளையாட இருக்கிறது