ஐபிஎல் 2025

சிஎஸ்கே மேட்ச் தோற்க.. இப்படியும் ஒரு காரணம் இருக்கா.. தோனிக்கு அதிர்ஷ்டம் அமையுமா?.. ஆச்சரிய தகவல்

சிஎஸ்கே அணி இன்று மிக முக்கியமான போட்டியில் சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. மேலும் சிஎஸ்கே அணி தங்களின் கடைசி 7 போட்டியில் 6 போட்டியை தோற்றதற்கு பின்னால் உள்ள சுவாரசிய காரணம் ஒன்று வெளியில் தெரிய வந்திருக்கிறது.

- Advertisement -

தற்போது சிஎஸ்கே அணி பத்து போட்டியில் எட்டு போட்டியை தோற்று விட்ட காரணத்தினால் ப்ளே ஆஃப் வாய்ப்பு சுத்தமாக முடிவுக்கு வந்துவிட்டது. அதே சமயத்தில் ஆர்சிபி அணி 10 போட்டியில் ஏழு போட்டிகளை வென்று 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வரலாறு காணாத சரிவுக்கு காரணம்

சிஎஸ்கே அணி இந்த அளவிற்கு மோசமாக செயல்படுவதற்கு ஏலத்தில் பேட்டிங் யூனிட்டுக்கு சரியான வீரர்களை சிஎஸ்கே அணி நிர்வாகம் வாங்கவில்லை. மேலும் ரவிச்சந்திரன் அஸ்வினை 10 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது அந்த அணிக்கு பல வகைகளில் பின்னடைவை உருவாக்கி இருக்கிறது.

இத்துடன் கேப்டன் ருதுராஜ் மற்றும் தோனி இருவருமே பந்து வீச்சாளர்களை சரியான இடங்களுக்கு பயன்படுத்தாததும் ஒரு காரணமாக இருக்கிறது. பத்திரனாவை வெளியே அனுப்பி நாதன் எல்லிசை விளையாட வைக்க வேண்டிய சூழ்நிலை இருந்த காலத்தில் கூட இரண்டு கேப்டன்களும் அதை உணர்ந்து சரியான முறையில் செயல்படவில்லை.

- Advertisement -

வெளிவந்த வித்தியாச காரணம்

சிஎஸ்கே அணி கடைசியாக விளையாடிய 7 போட்டிகளில் ஆறு போட்டிகளை தோற்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. லக்னோ மணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி டாஸ் வென்று லக்னோ அணியை முதலில் பேட்டிங் செய்ய வைத்து இரண்டாவதாக பேட்டிங் செய்து வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஆரம்பத்தில் ஆர்சிபி-யில் என் வாழ்க்கையை மாற்றியது.. இந்த வெளிநாட்டு வீரர்தான் – விராட் கோலி பேச்சு

இந்த கடைசி ஏழு போட்டிகளில் லக்னா அணிக்கு எதிரான ஒரு போட்டியை தவிர மற்ற ஆறு போட்டிகளிலும் சிஎஸ்கே டாஸ் தோற்று போட்டியையும் தோற்று இருக்கிறது. எனவே சிஎஸ்கே அணியின் தோல்விக்கு டாஸ் ஒரு பெரிய பங்கை கொண்டு இருக்கிறது என்று தெரிய வருகிறது. இன்றைய போட்டியில் தோனிக்கு டாஸ் அதிர்ஷ்டம் கிடைத்தால், ஆர்சிபி அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து ரிவைன்ச் எடுக்க முடியும்.

- Advertisement -
Published by
Tags: CSKDhoni