நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி வெளியிட்டிருக்கும் ஒரு வீடியோவில் விராட் கோலி ஐபிஎல் தொடரில் தன் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு வெளிநாட்டு வீரர் குறித்து பேசி இருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் 14 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் ஆர்சிபி அணி வலிமையாக இருக்கிறது. மேலும் இந்த ஆண்டு கோப்பையை வெல்லவும் வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது. வழக்கம்போல் விராட் கோலி இந்த முறையும் ஆர்சிபி அணிக்கு அதிக ரன் அடித்தவராக இருக்கிறார்.
ஐபிஎல் தொடரின் அதிசய வீரர்
இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தி வரும் ஐபிஎல் தொடர் தற்போது 18 வது சீசனை எட்டி இருக்கிறது. இந்த அனைத்து சீசன்களிலும் ஒரே அணிக்காக விளையாடிய ஒரே வீரர் விராட் கோலி மட்டுமே ஆவார். முதல் சீசன் ஆரம்பித்து தற்போது வரையில் அவர் ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் ஆரம்பத்தில் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டு வீரருடன் தான் உரையாடியது தனக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், அவருடைய புத்திசாலித்தனத்தை பார்த்து தான் வியந்து விட்டதாகவும் விராட் கோலி தற்போது வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
இவருடைய பேச்சு முக்கியமானது
இதுகுறித்து விராட் கோலி கூறும் பொழுது “ஆரம்பத்தில் நான் சேர்ந்து விளையாடிய வீரர்களில் தென் ஆப்பிரிக்காவில் மார்க் பவுச்சர் என்னுள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். எனது பலவீனங்கள் என்னவென்று அவர் மிகவும் எளிமையாக கண்டுபிடித்தார். அடுத்த கட்டத்திற்கு நான் முன்னேற வேண்டும் என்றால் அவரிடம் எதையும் கேட்காமல் நான் செய்ய வேண்டும் என்று நினைக்க வைத்தார்”
இதையும் படிங்க : ஆர்சிபியா.? மும்பையா.? இந்த வருடம் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணி.. சுனில் கவாஸ்கரின் கணிப்பு
“அவர் அப்பொழுது என்னிடம் கூறும்பொழுது ‘நான் இன்னும் மூன்று நான்கு ஆண்டுகள் கழித்து இந்தியாவுக்கு கிரிக்கெட் வர்ணனையாளராக வருவேன், அப்பொழுது நீங்கள் இந்தியாவுக்காக விளையாடாமல் இருந்தால், நீங்கள் உங்களுக்கே பெரிய தீங்கை செய்து கொண்டீர்கள்’ என்று அர்த்தம் என்று கூறினார். அவர் என்னுடன் நடத்திய உரையாடல்களால் என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்தார்” என்று கூறியிருக்கிறார்.






