தப்பிக்க வழியே இல்ல.. தோனி கேப்டன்சில இது நடந்திருக்க கூடாது.. கண்ணீர் வடிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்

0
84
Dhoni

நடப்பு ஐபிஎல் தொடரில் தோனியின் தலைமையில் சிஎஸ்கே அணி தனது ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான சாதனை ஒன்றை படைக்க இருப்பது குறித்து சிஎஸ்கே ரசிகர்கள் மிகவும் கவலை அடைந்து இருக்கிறார்கள்.

நேற்று ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 200 ரன்கள் தாண்டி குவிக்க வேண்டிய நிலையில் இருந்து கடைசியாக தோனி மற்றும் சிவம் துபே மிக மெதுவாக விளையாடியதால் 187 ரன்கள் மட்டுமே எடுத்து இறுதியில் தோல்வி அடைந்தது.

- Advertisement -

மோசமான அணிகளின் சிறப்பான செயல்பாடு

நடப்பு ஐபிஎல் தொடரில் பவுலிங் யூனிட் இல்லாத காரணத்தினால் லக்னோ மிகவும் மோசமான அணியாக கணிக்கப்பட்டிருந்தது. அந்த அணி கூட இரண்டு போட்டிகள் மீதும் இருக்கும் நிலையில் 5 போட்டிகளை வென்று 10 புள்ளிகள் உடன் இருக்கிறது. இதேபோல சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மிக மோசமாக விளையாடி இருந்தாலும் 9 புள்ளிகள் பெற்று இருக்கிறது.

அதே சமயத்தில் கையில் வெல்வதற்கு வசதியாக இருந்த ஐந்து போட்டிகளை தோற்றும் கூட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. ஆனால் இந்த அணிகளை விட மிக மோசமாக விளையாடி சிஎஸ்கே அணி ஆறு புள்ளிகள் மட்டுமே எடுத்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

சிஎஸ்கேவுக்கு வரலாற்று சோகம்

தற்போது சிஎஸ்கே அணிக்கு ஒரு போட்டி மீதம் இருக்கிறது. இதில் வென்றால் ராஜஸ்தான் அணியுடன் சேர்ந்து 8 புள்ளிகளுக்கு வர முடியும். ஆனால் ராஜஸ்தான் அணியை தாண்டி செல்வது கடினமாக இருக்கும். ஏனென்றால் ராஜஸ்தான் -0.549 ரன் ரேட் உடன் இருக்கிறது. சிஎஸ்கே அணியின் ரன் ரேட் -1.030 என மிக மோசமாக இருக்கிறது. எனவே கடைசி போட்டியில் குஜராத் அணியை மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் சி எஸ் கே அணியால் வெல்ல முடியாது.

இதையும் படிங்க : பாசம் வேண்டாம்.. சிஎஸ்கேவை விட்டு அந்த 2 பேர அனுப்பிடுங்க.. அப்புறம் நீங்கதான் ராஜா – ஆகாஷ் சோப்ரா பேச்சு

இதன் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருந்து சிஎஸ்கே அணியால் மீண்டும் வரவே முடியாது. ஆனால் சிஎஸ்கே அணியின் ஐபிஎல் வரலாற்றில் இதுவரையில் அந்த அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் முடித்தது கிடையாது என்ற சிறப்பு வரலாறை வைத்திருக்கிறது. ஆனால் பல்வேறு சாதனை வரலாறுகளை படைத்த சிஎஸ்கே கேப்டன் தோனியின் தலைமையில் சிஎஸ்கே வரலாற்று மோசமான சாதனையை படைக்க இருப்பது, சிஎஸ்கே ரசிகர்களை மிகுந்த வருத்தம் அடைய வைத்திருக்கிறது!

- Advertisement -