நேற்று சிஎஸ்கே அணி ராஜஸ்தான் அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பிறகு சிஎஸ்கே அணியின் பிரச்சனைக்கு தீர்வாக என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் பேட்டிங் வரிசையில் நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் அனுப்பப்பட்டது தவறான முடிவாக அமைந்திருக்கிறது. இவர்கள் இருவராலும் பேட்டிங்கில் ரங்கள் சேர்க்க வேண்டிய ஆரம்ப கட்டத்தில் அதற்கேற்ற வகையில் விளையாட முடியவில்லை. தோனியும் முன்னால் வந்து விளையாட முடிவதில்லை.
சிஎஸ்கே அணியின் பிரச்சனை
நேற்றைய போட்டியில் கான்வே துவக்க ஆட்டக்காரராக வந்தார். அடுத்த மினி ஏலத்தில் அவருடைய இடத்திற்கு நல்ல அதிரடியாக விளையாடக்கூடிய வெளிநாட்டு வீரர் ஒருவரை வாங்கிக் கொள்ள முடியும். இன்னொரு துவக்க ஆட்டக்காரராக ருதுராஜ் இருப்பார். எனவே துவக்க இடத்திற்கான பிரச்சனை தீர்ந்து விட்டது.
மேலும் ஆயுஸ் மத்ரே மற்றும் ருதுராஜ் இருவரும் ஆட்டத்தை தொடங்கலாம். அப்படி செய்யும் பொழுது கேமரூன் கிரில் மாதிரியான ஒரு ஆல் ரவுண்டரை வாங்கி ஐந்து அல்லது ஆறாவது இடத்தில் வைத்துக் கொள்ளலாம். இதைத்தொடர்ந்து பேட்டிங் வரிசையில் ஆறாவது இடம் வரையில் அஸ்வின், ஜடேஜா, தோனி என யாரும் வர வேண்டியதில்லை. மற்ற அணிகளை போல அதிரடியாக விளையாடும் வீரர்களை வைத்துக் கொள்ளலாம். ஆனால் கேமரூன் கிரீன் போன்ற ஒருவரை வாங்க பணம் தேவை என்பதுதான் பிரச்சனை.
இவரை விட்டு விடுங்கள்
இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது “நான் ஜடேஜாவை டிரேட் செய்துவிடலாம் என்றுதான் சொல்லுவேன். உங்களுடைய நான்காவது இடத்திற்கு பிரிவீஸ் சரியான வீரராக இருப்பார். மேலும் கான்வே மத்ரே மற்றும் உர்வில் படேல் இப்போதைக்கு முதல் மூன்று இடங்களுக்கான ஒரு மாற்று வீரர்களாக இருப்பார்கள். அடுத்து மினி ஏலத்திற்கு முன்பாக ரச்சின் ரவீந்திர மற்றும் கான்வே இருவரையும் விடுவித்து விட்டால், உங்களுக்கு துவக்க இடத்திற்கு அதிரடியாக விளையாடும் ஒரு வெளிநாட்டு வீரரை வாங்க முடியும்”
இதையும் படிங்க : சொல்லிட்டு கிளம்புங்க தோனி.. நீங்க பினிஷர் எல்லாம் கிடையாது.. அது யார் தெரியுமா? – ஸ்ரீகாந்த் விமர்சனம்
“உங்கள் கேப்டன் ருதுராஜை அவர் விரும்பாத மூன்றாவது இடத்தில் பேட்டரி செய்ய வைக்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள்? நீங்கள் மூன்றாவது இடத்திற்கு உர்வில் படேலைதான் விளையாட வைக்க வேண்டும். இதற்கு அடுத்து நீங்கள் ஒரு பினிஷரை வாங்கிக் கொள்ளலாம். வெளிநாட்டு வீரர்களாக நூர் அஹமத் மற்றும் பதிரனாவை பந்துவீச்சு யூனிட்டில் வைத்துக் கொள்ளலாம். நீங்கள் புதிய வீரர்களை வாங்க ஜடேஜாவை வெளியே விட்டுவிடலாம்” என்று கூறி இருக்கிறார்.