” டூ பிளசிஸ் & ரெய்னாவை மிஸ் செய்கிறோம் ” – தொடர்ந்து சொதப்பும் சி.எஸ்.கே ; டிவிட்டரில் ரசிகர்கள் வருத்தம்

0
100
Moeen Ali Faf du Plessis and Suresh Raina

இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் தற்போது விளையாடிக் கொண்டிருக்கின்றன. முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது.

பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக லிவிங் லிவிங்ஸ்டோன் 32 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் அடித்து 60 ரன்கள் விளாசினார். சென்னை அணியில் சிறப்பாக பந்து வீசிய கிறிஸ் ஜோர்டான் மற்றும் பிரிட்டோரியஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

- Advertisement -
தொடர் விக்கெட்டுகளை இழந்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை அணியின் ஓபனிங் வீரர் உத்தப்பா 13 ரன்னிலும், ருத்ராஜ் ஒரு ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். பின்னர் வந்த அலி டக் அவுட்டாக, அதன் பின்னர் வந்த கேப்டன் ரவீந்திர ஜடேஜாவும் டக் அவுட் ஆனார். பின்னர் அம்பத்தி ராயுடு 13 ரன்களில் ஆட்டமிழக்க, சென்னை அணி 5 விக்கெட்டுக்களை இழந்து தற்பொழுது தடுமாறி வருகிறது.

13 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு அந்த அணி 72 ரன்கள் மட்டுமே குவித்துள்ளது. அந்த அணி வெற்றி பெற மேலும் 109 ரன்கள் தேவை. தற்பொழுது களத்தில் மகேந்திர சிங் தோனி மற்றும் ஷிவம் டுபே விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -
ஃபேப் டு பிளேசிஸ் மற்றும் சுரேஷ் ரெய்னாவை மிஸ் செய்கிறோம்

சென்னை அணியின் மோசமான பேட்டிங்கை பார்த்து சென்னை ரசிகர்கள் விரக்தியடைந்து சமூக வலைதளங்களில் குறிப்பாக டுவிட்டர் வலைத்தளத்தில் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி கொண்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு சென்னை அணிக்கு ஃபேப் டு பிளேசிஸ் எவ்வளவு சிறப்பாக விளையாடினார் என்று சொல்ல இந்த ஒரு கட்டுரை போதாது. முதல் போட்டியில் இருந்து இறுதிப்போட்டி வரை அவ்வளவு சிறப்பாக கடந்த ஆண்டு விளையாடினார். அதேபோல சுரேஷ் ரெய்னா சென்னை அணிக்கு முதல் ஓவர்களில் எவ்வளவு சிறப்பாக விளையாடுவர் என்பது அனைவரும் தெரிந்த விஷயம்.

இவர்கள் இருவரும் இல்லாத காரணத்தினால் தற்பொழுது சென்னை அணியின் பேட்டிங்கில் தடுமாறி வருகின்றது என்றும் அவர்களை சென்னை ரசிகர்கள் மிஸ் செய்வதாகவும் ட்விட்டர் வலைதளத்தில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

- Advertisement -