நடப்பு ஐபிஎல் தொடரில் நாளை லக்னோ அணிக்கு எதிராக லக்னோவில் சிஎஸ்கே அணி விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தன்னுடைய வழக்கமான ஒரு பிடிவாதத்தை கைவிட்டு முக்கியமான ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.
தற்போது சிஎஸ்கே அணி ஆறு போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் தோல்வி அடைந்திருக்கிறது. இன்னும் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தால் நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக பிளே ஆப் சுற்று வாய்ப்பிலிருந்து வெளியேறுவது ஏறக்குறைய உறுதி ஆகிவிடும். எனவே இது சிஎஸ்கே ரசிகர்களை கவலை அடைய வைத்திருக்கிறது.
மைக் ஹசி சர்ச்சை கருத்து
சிஎஸ்கே அணியின் கடந்த போட்டி தோல்விக்கு பிறகு பேசி இருந்த அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி தங்களுக்கு இன்னும் பிளே ஆப் சுற்று வாய்ப்பு முடிந்து விடவில்லை என்றும், தங்களுடைய மூத்த அனுபவ பேட்ஸ்மேன்கள் சாதிப்பார்கள் என தாங்கள் இன்னும் நம்புவதாகவும், எனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பு முடிந்தால் மட்டுமே இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தரப்படும் என்றும் கூறியிருந்தார்.
ஆனால் சிஎஸ்கே அணியில் இந்திய மூத்த வீரர்களின் செயல்பாடு மிகவும் மோசமான முறையில் இருந்து வருகிறது. எனவே சிஎஸ்கே அணியின் இரண்டாவது போட்டி முடிந்ததில் இருந்து சிஎஸ்கே ரசிகர்கள் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என தொடர்ந்து கேட்டு வரும் நிலையில், இவருடைய கருத்து சிஎஸ்கே ரசிகர்களால் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
தோனி பிடிவாதத்தை கைவிட வேண்டும்
பொதுவாக தோனி அனுபவம் கொண்ட பேட்ஸ்மேன்களை அதிகம் நம்பி தொடர்ந்து விளையாட வைப்பார். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அவ்வளவு எளிதில் தர மாட்டார். நாளைய போட்டியில் தோனி இந்த பிடிவாதத்தை தளர்த்திக்கொண்டு இந்திய மூத்த பேட்ஸ்மேன்களை வெளியேற்றிவிட்டு இளம் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.
இதையும் படிங்க : ஏசில உக்காந்துட்டு என்னை பத்தி பேசறதுக்கு முன்ன.. நீங்க என்ன செஞ்சிங்கன்னு பாருங்க – சர்துல் தாக்கூர் பதிலடி
சிஎஸ்கே அணியில் தற்பொழுது ஷேக் ரசீத் மற்றும் வன்ஸ் பேடி என இரண்டு இளம் அதிரடி பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். நாளை இவர்களில் ஒருவருக்காவது தோனி வாய்ப்பு கொடுக்க வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒருவேளை யாருக்குமே வாய்ப்பு தராமல் நாளைய போட்டிகளும் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தால் அது பெரிய விமர்சனத்தை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.






