சஞ்சு சாம்சன் சிஎஸ்கேவுக்கு தேவையே இல்லை.. இந்த ஆர்சிபி வீரரை வாங்குங்க – ரசிகர்கள் கோரிக்கை

0
62
Dhoni

தற்போது சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்சன் தேவையில்லை எனவும் எனவே வேறு வீரர்களை வாங்கலாம் எனவும் சிஎஸ்கே ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அதே சமயத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் சஞ்சு சாம்சனை வாங்குவதற்கு பெரிய அளவில் ஆர்வம் காட்டி வருகிறது.

அடுத்த மாதம் அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக ஒவ்வொரு அணிகளும் ஏலத்திற்கு முன்பாக வேறு அணிகளில் தங்களுக்கு தேவையான வீரர்கள் இருந்தால் சுமுகமாக டிரேடிங் செய்து கொள்ள முயற்சி செய்து வருகின்றன. இதில் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு வருகிறார் என்கின்ற செய்தி முக்கியமானதாக இருக்கிறது.

- Advertisement -

சஞ்சு சாம்சனால் ஏற்படும் இழப்பு

தற்போது சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சிஎஸ்கே அணி வாங்குவதற்கு, இவர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் டிவால்ட் பிரிவிஸ் என இரண்டு வீரர்களை கொடுக்க வேண்டும் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இது சிஎஸ்கே அணிக்கு பெரிய தலைவலியை எதிர்காலத்தில் உருவாக்கும் என ரசிகர்கள் கருதுகிறார்கள்.

தற்போது சிஎஸ்கே அணிக்கு ஆயுஸ் மத்ரே மற்றும் கேப்டன் ருதுராஜ் இருவரும் சரியான தொடக்க ஆட்டக்காரர்களாக இருப்பார்கள். அதே சமயத்தில் மூன்றாவது இடத்தில் விக்கெட் கீப்பிங் அதிரடி பேட்ஸ்மேன் உர்வில் படேல் இருக்கிறார். நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களுக்கு சிவம் துபே மற்றும் பிரிவிஸ் வந்து விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சஞ்சு சாம்சன் தேவையில்லை என சிஎஸ்கே ரசிகர்கள் கருதுகிறார்கள்.

- Advertisement -

இவரைப் போன்று வாங்குங்கள்

இந்த நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் காயத்தில் இருந்து மீண்டு வரப் போகும் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர், முன்னாள் ஆர்சிபி வீரர் கேமரூன் கிரீனை வாங்க வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் விரும்புகிறார்கள். இவர் சாம் கரன் மற்றும் ஓவர்டன்னை விட சிறந்த வெளிநாட்டு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக இருப்பார்.

இதையும் படிங்க : நானே சொல்றேன்.. மும்பை இந்தியன்ஸ் இந்த 2 பேர கழட்டி விடணும்.. இந்த 3 பேர வச்சுக்கலாம் – சுரேஷ் ரெய்னா எதிர்பார்ப்பு

மேலும் ஆஸ்திரேலிய டி20 தொடரில் மிகச் சிறப்பாக பந்து வீசிய நாதன் எல்லீஸை சிஎஸ்கே அணியில் தொடர்ந்து தக்க வைத்து விளையாடுவதற்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும், முடிந்தால் பத்திரனாவை வெளியில் விட்டு பணத்தை மீதி செய்யலாம் எனவும் சிஎஸ்கே ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

- Advertisement -