மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறை ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பாக எந்த வீரர்களை தக்க வைக்க வேண்டும் கழட்டி விட வேண்டும்? என்பது குறித்து பேசி இருக்கிறார்.
அடுத்த மாதம் ஐபிஎல் மினி ஏலம் நடப்பது உறுதி ஆகி இருக்கிறது. அதே சமயத்தில் அதற்கு முன்பாக அணி நிர்வாகங்கள் கழட்டிவிட விரும்பும் வீரர்களின் பட்டியலை இந்த மாதத்தில் கொடுக்க வேண்டி இருக்கலாம்.
மும்பை இந்தியன்ஸ் நிலைமை
தற்போது ஐபிஎல் தொடரில் பேப்பரில் மிகவும் வலிமை வாய்ந்த அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது. ஆனால் அந்த அணி களத்திற்கு வரும்பொழுது அதனுடைய திறமைக்கு தகுந்த அளவுக்கு விளையாடுவதில்லை. அணி ஒருங்கிணைந்து செயல்படுவது போல தெரிவதில்லை.
மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரையில் தேவையான வீரர்களுக்கு அதிகமாகவே இருக்கிறார்கள். ஏதாவது ஒரு இடத்தில் ஒரு வீரரை சும்மாவே விளையாட வைக்கும் அளவுக்கு அவர்களிடம் வலிமையான பிளேயிங் லெவன் இருக்கிறது. இதன் காரணமாக இருவரை கழட்டி விட வேண்டும் என சுரேஷ் ரெய்னா கூறி இருக்கிறார்.
இவர்கள் இருவரை கழட்டி விடலாம்
இது குறித்து சுரேஷ் ரெய்னா பேசும்பொழுது “மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் ரோஹித் சர்மாவை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்காக அவர் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார். இதற்குப் பிறகு தீபக் சகர் அணியில் இருக்கிறார். அவர் இப்பொழுதுதான் அந்த அணிக்கு வந்திருக்கிறார். அவர் தேவை என்றால் அவர்கள் வைத்துக் கொள்ளலாம் இல்லை என்றாலும் சூழ்நிலை பொறுத்து விடுவிக்கலாம்”
இதையும் படிங்க : சிஎஸ்கே இந்த 4 வீரர்களை கழட்டி விடப் போகுது.. 23 கோடி கையில இருக்கும்.. மாஸ்டர் பிளான் செஞ்சுட்டாங்க – ஆகாஷ் சோப்ரா பேச்சு
“அதே சமயத்தில் போல்ட் மிகவும் ஒரு சிறப்பான வீரர். எனவே அவர்கள் அவரை தக்க வைத்து தொடர்ந்து விளையாட வேண்டும். மேலும் அவர்களுக்கு வில் ஜேக்ஸ் தேவைப்படவில்லை. இத்துடன் முஜிபுர் ரஹ்மான் இருக்கிறார். அவரும் அவர்களுக்கு தேவைப்பட மாட்டார். எனவே இந்த இரண்டு வீரர்களையும் கழட்டி விடலாம்” என்று கூறியிருக்கிறார்.






