பஞ்சாப் அணிக்கு எதிராக ஸ்டேடியத்தில் கவர்ச்சியாக தென்பட்ட சென்னை ரசிகை ; இன்ஸ்டாகிராமில் வைரல்

0
767
CSK Fangirl Shruti Tuli

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்ற திங்கட்கிழமை ( ஏப்ரல் 25 ) மயாங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. போட்டி கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாக சென்றது. மிடில் ஓவர்களில் ராயுடு அதிரடியாக ஆடி சிக்சர் மழை பொழிந்தார். இருப்பினும் பஞ்சாப் கிங்ஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது.

16ஆவது ஓவரில் ராயுடு இமாலய சிக்சர் அடித்த போது, பெரிய ஸ்க்ரீனில் ஓர் ரசிகையை காட்டினார்கள். பின்னர் மீண்டும் 2/3 முறை அதே ரசிகை தொலைகாட்சியில் தென்பட்டார். அது சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. அனைவரும் யார் அந்த ரசிகை என்று தேடி வருகின்றனர். மஞ்சள் நிற கவர்ச்சியான டாப்ஸ் அணிந்து அனைவரையும் ஈர்த்தார்.

- Advertisement -

இந்த சென்னை ரசிகையின் பெயர் சுருதி டுளி. 2013ஆம் ஆண்டு தன்னுடைய கேரியரை மிஸ் இந்தியா போட்டி மூலம் தொடங்கினார். அதில் சுருதி தான் முதல் நபராக இறுதிப் போட்டிகும் முன்னேறினார். நடிகையாக மட்டுமில்லாமல் மாடலாகவும் இவர் செயல்பட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப்புக்கு எதிராக தோல்வியை தழுவியப் பின் சுருதி டுளி, தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருத்தத்துடன் இதைப் பதிவிட்டார். “ நான் எதிர்பார்த்த போட்டி முடிவு இது அல்ல. ஆனால் ஒவ்வொரு நொடியையும் சந்தோசமாக அனுபவித்தேன். ”

அன்று சுருதி டுளி மட்டுமல்ல, பல சென்னை ரசிகர்களும் சி.எஸ்.கே அணி வெற்றிப் பெற்றுவிடும் என நினைத்தனர். ராயுடுவின் அதிரடி ஆட்டம் அனைவருக்கும் நம்பிக்கை அளித்தது. ஆனால் 18வது ஓவரில் ரபாடா பந்தில் கிளீன் போல்ட் ஆகி பெவிலியன் திரும்ப பஞ்சாப் அணி 2 புள்ளிகளைத் தட்டிச் சென்றது.

- Advertisement -
- Advertisement -