நேற்று சிஎஸ்கே முதலிடத்தில் இருந்து மூன்றாவது இடம் இன்று நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது; பஞ்சாபை பந்தாடியது லக்னோ!

0
278
Ipl2023

இன்று பஞ்சாப் மொகாலி மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகள் ஐபிஎல் தொடரில் மோதிக்கொண்டன!

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். இந்த முடிவுக்காக அவர் மிகவும் வருத்தப்பட வேண்டி இருந்தது.

- Advertisement -

லக்னோ அணிக்கு பேட்டிங்கை துவங்கிய கேப்டன் கே எல் ராகுல் 12 ரன்கள் வெளியேறினார். ஆனால் இதற்கு அடுத்து மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் கையில் மேயர்ஸ் 24 பந்தில் 54 ரன்கள், ஆயுஸ் பதோனி 24 பந்தில் 43 ரன்கள், ஸ்டாய்னிஸ் 40 பந்தில் 72 ரன்கள், நிக்கோலஸ் பூரன் 19 பந்தில் 45 ரன்கள், தீபக் ஹூடா 6 பந்தில் 11* ரன்கள், குர்னால் பாண்டியா இரண்டு பந்தில் 5* ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கட்டுகள் இழப்புக்கு லக்னோ 257 ரன்கள் எடுத்தது.

லக்னோ அணி எடுத்த இந்த ரன் ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ரன் ஆகும். பஞ்சாப் தரப்பில் ரபாடா நான்கு ஓவர்கள் பந்து வீசி 52 ரன்கள் தந்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன்களை சேஸ் செய்ய வேண்டிய நெருக்கடியில் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு கேப்டன் ஷிகர் தவான் ஒரு ரன், பிரப்சிம்ரன் 9 என வெளியேறினார்கள். அடுத்து அதர்வா டைட் உடன் சேர்ந்து சிக்கந்தர் ராசா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 36 ரன்களில் வெளியேற, அடுத்து அதர்வா டைட் அரை சதம் அடித்து 36 பந்தில் 66 ரன்கள் உடன் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து லிவிங்ஸ்டன் 23, சாம் கரன் 21, ஜிதேஷ் சர்மா 24, ராகுல் சஹர் 0, ரபாடா 0, ஷாருக்கான் 6, அர்ஸ்தீப் 2* ரன்கள் எடுக்க 19 புள்ளி 5 ஓவரில் பஞ்சாப் அணி 21 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் லக்னோ தனது ஐந்தாவது வெற்றியை 56 ரன்கள் வித்தியாசத்தில் பதிவு செய்தது.

தற்பொழுது ராஜஸ்தான், லக்னோ, குஜராத், சென்னை ஆகிய நான்கு அணிகளும் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் இருக்கின்றன!