சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் இளம் இந்திய பேட்ஸ்மேன்கள் பேட்டிங் அணுகுமுறை குறித்து கவலைப்படுவதாக தெரிவித்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் இளம் இந்திய வீரர்களின் ஆதிக்கம் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. குறிப்பாக டெல்லியில் இருந்து வருகின்ற இளம் வீரர்கள் மிகப் பெரிய தாக்கத்தை நடப்பு ஐபிஎல் தொடரில் ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால் இளம் வீரர்கள் பக்கம் சாயாத சிஎஸ்கே அணி மிகப் பெரிய சரிவை சந்தித்து வருகிறது.
சிஎஸ்கே அணிக்கு இளம் திறமைகளை கண்டறியும் குழுவில் இடம் பெற்று இருந்த வித்யூத் சிவராமகிருஷ்ணன் தற்போது ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் இளம் வீரர்கள் ஐவரின் பெயரை எழுதிக் கொடுத்ததாகவும், ஆனால் அதை சிஎஸ்கே அணி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என்றும் வெளிப்படையாகவே தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் மற்ற அணிகளில் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வந்த வேலையில், வேறு வழியில்லாமல் சிஎஸ்கே அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்ட ஷேக் ரசீத் மற்றும் ஆயுஷ் மத்ரே இரண்டு இளம் வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு சிஎஸ்கே அணியின் அணுகுமுறை தவறானது என்பதை நிரூபித்து இருக்கிறார்கள். இப்படியான நிலையில் மீண்டும் சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் சர்ச்சையான முறையில் பேசி இருக்கிறார்.
இதுகுறித்து ஸ்டீபன் பிளமிங் பேசும்பொழுது “தற்போது இந்திய இளம் பேட்ஸ்மேன்கள் முதல் பந்தில் இருந்து அடித்து விளையாட ஆரம்பிக்கிறார்கள். ஆனால் இதுவே ஆடுகளம் கொஞ்சம் ட்ரிக்கியாக இருக்கும் பொழுது, இவர்களின் இந்த அணுகுமுறை சரியாக இருக்குமா நிலைத்திருக்குமா? என்பது நமக்கு தெரியாது. மேலும் ஆட்டம் நுணுக்கம் தொடர்ந்து வளருமா? என்பது கவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது”
இதையும் படிங்க : பிசிசிஐ சம்பள பட்டியல் அறிவிப்பு.. 9 புதிய வீரர்களுக்கு இடம்.. 1 வீரருக்கு ஸ்பெஷல் உயர்வு – முழு தகவல்கள்
“மேலும் மிடில் ஓவர்களில் ஜடேஜா மற்றும் சிவம் துபே இருவரும் இன்னும் கொஞ்சம் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். நாம் இன்னும் எல்லா வழிகளிலும் கொஞ்சம் அதிகம் முனைப்புடன் விளையாட வேண்டும். போட்டியில் வெற்றி பெறுவதற்கான 75% பேட்டிங் வரிசையில் முதல் மூன்று அல்லது நான்கு இடங்களில் இருப்பவர்கள் தான் எடுக்க வேண்டும். மற்ற அணிகளை பார்க்கும் பொழுதும் அதுதான் நடக்கிறது. நாமும் அதற்கு தயாராக வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.