தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய வீரர்களுக்கான சம்பள பட்டியலை வெளியிட்டிருக்கிறது. புதிதாக ஒன்பது வீரர்கள் சம்பள பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு வீரருக்கு சம்பள பட்டியலில் கிரேடு உயர்வு கொடுக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் சம்பள பட்டியலை அறிவித்த பொழுது அதிரடியாக ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் இசான் கிஷான் இருவரையும் நீக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த முறை அப்படியான அதிர்ச்சிகள் எதுவும் இல்லாமல், புதிய இந்திய வீரர்களுக்கும் சம்பள பட்டியலில் இடம் கொடுத்து பிசிசிஐ ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
நான்கு கிரேடுகளுக்கான சம்பளம்
பிசிசிஐ இந்திய வீரர்களை சம்பளத்திற்கு தரம் பிரிப்பதில் நான்கு கிரேடுகளை வைத்திருக்கிறது. இதில் ஏ+ கிரேடில் இடம்பெறும் வீரர்களுக்கு வருடத்திற்கு 7 கோடி ரூபாய், ஏ கிரேடுக்கு 5 கோடி ரூபாய், பி கிரேடுக்கு 3 கோடி ரூபாய், சி கிரேடுக்கு 1 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டு வருகிறது.
இதில் தற்பொழுது ஏ+ கிரேடில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா என நான்கு வீரர்கள் மட்டுமே இடம் பெற்று இருக்கிறார்கள். இதற்கு அடுத்து ஏ கிரேடில் முகமத் சிராஜ், முகமத் ஷமி, சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்த பட்டியலில் ரிஷப் பண்ட் புதிதாக இடம் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பி மற்றும் சி கிரேடில் இடம் பெற்றவர்கள்
கிரேடு பி
சூர்யகுமார் யாதவ்
குல்தீப் யாதவ்
அக்சர் படேல்
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
ஷ்ரேயாஸ் ஐயர்
கிரேடு சி
ரிங்கு சிங்
திலக் வர்மா
ருதுராஜ் கெய்க்வாட்
சிவம் துபே
ரவி பிஷ்னோய்
வாஷிங்டன் சுந்தர்
முகேஷ் குமார்
சஞ்சு சாம்சன்
அர்ஷ்தீப் சிங்
பிரசித் கிருஷ்ணா
ரஜத் படிதார்
துருவ் ஜுரல்
சர்பராஸ் கான்
நிதிஷ் குமார் ரெட்டி
இஷான் கிஷன்
அபிஷேக் சர்மா
ஆகாஷ் தீப்
வருண் சக்ரவர்த்தி
ஹர்ஷித் ராணா
இதையும் படிங்க: ஜடேஜாவை விடவே கூடாது.. இதனால்தான் அடித்து விளையாடினேன் – சூரியகுமார் யாதவ் பேட்டி
இந்த நிலையில் கடந்த சம்பள பட்டியலில் சேர்க்கப்படாமல் நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் இருவரும் மீண்டும் சம்பள பட்டியலில் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒருவர் பி கிரேடிலும், இன்னொருவர் சி கிரேடிலும் சேர்க்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.






