ஆமா, தோனிக்கு முட்டில பிரச்சினை இருக்கு; உண்மை தான் -அடுத்த போட்டியில் இருப்பாரா? மாட்டாரா? என்று ஷாக் பதிலை கொடுத்த ஸ்டீபன் பிளெம்மிங்!

0
187

தோனிக்கு காலில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. அதற்கேற்றார்போல தான் அவர் ஆடுகிறார் எனும் அதிர்ச்சிகரமான தகவலை கொடுத்திருக்கிறார் சிஎஸ்கே தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிஎஸ்கே அணி, துரதிஷ்டவசமாக கடைசி வரை வந்து மூன்று ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது. கடைசி ஓவர் வரை சென்ற ஆட்டத்தில் 6 பந்துகளில் 21 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் ஏற்பட்டது.

- Advertisement -

அப்போது பேட்டிங்கில் இருந்த மகேந்திர சிங் தோனி, இரண்டு சிக்ஸர்கள் அடித்து அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தார். பின்னர் சந்தீப் சர்மா அபாரமாக யார்க்கர் வீசியதால் சிஎஸ்கே அணி இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை பெற்றது.

போட்டியில் கீப்பிங் செய்து கொண்டு இருந்த தோனி, கிட்டத்தட்ட 16ஆவது 17ஆவது ஓவரின் போது காலில் சற்று அசவுகரியமாக இருப்பது போல உணர்ந்தார். பிசியோ வரவழைத்து அதற்கு சிகிச்சையும் பெற்றுக்கொண்டு பின்னர் விளையாட்டை தொடர்ந்தார். போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளரிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஸ்டீபன் பிளம்மிங் பதில் கூறியதாவது:

“ஆம், தோனிக்கு இடது காலில் சில அசவுகரியங்கள் இருக்கிறது. அதற்கு என்று தனி சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றவாறு எப்படி கால் அசைவுகள் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து விளையாடுகிறார். அவர் தலைசிறந்த வீரர் மற்றும் சிறந்த உடல் தகுதி கொண்டவர். நன்றாக குணமடைந்து வருகிறார். அவரின் முக்கியத்துவம் எங்களுக்கு புரியும். ரசிகர்களின் எதிர்பார்ப்பை கண்டிப்பாக பூர்த்தி செய்வார். அடுத்த போட்டியில் விளையாடுவாரா?மாட்டாரா? என்பதை போட்டிக்கு முன்பு அணி நிர்வாகம் மற்றும் அவரே தனிப்பட்ட முறையில் முடிவுகள் எடுப்பார்.” என்றார்.

- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது தோனி பினிஷிங்கில் ஆடிய விதம் பலரையும் மிரளவைத்தது. ஆகையால் அடுத்த அடுத்த போட்டிகளில் அவர் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதை பலரும் விரும்புகின்றனர். அதற்கேற்றுவாறு உடல் தகுதியைப்பெற்று வரவேண்டும் என்றும் வேண்டுகின்றனர்.