உர்வில் படேல் பேட்டிங்கை விட இவர் பேட்டிங்க்கு தலை வணங்குகிறேன்.. சாம்சன் சொன்னதுதான் வேகம் வந்தது – ருதுராஜ் பேட்டி

0
50
Ruturaj

இன்று ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்த வெற்றி குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேசியிருக்கிறார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 8 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய சிஎஸ்கே 19.2 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு இலக்க எட்டி 5 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

பிளே ஆப் வாய்ப்பு

தற்போது சிஎஸ்கே 11 போட்டிகளில் விளையாடி ஆறு வெற்றிகள் உடன் 12 புள்ளிகள் எடுத்து உள்ளது. அடுத்த மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளை வென்றால் உறுதியாக பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு சிஎஸ்கே அணி சென்றால் அது உண்மையில் மிகப்பெரிய விஷயமாக அமையும். கடந்த ஆண்டு மிக மோசமாக அமைந்த நிலையில் இந்த ஆண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து ப்ளே ஆப் சுற்றை எட்டுவது மிகப் பெரிய விஷயம்.

- Advertisement -

இவருக்கு தலை வணங்குகிறேன்

இது குறித்து ருதுராஜ் பேசும்போது “வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. உர்வில் படேல் சிறப்பாக விளையாடினார். ஆனால் அந்த பக்கத்தில் ஜோஸ் இங்லீஷ் மிகவும் அருமையாக விளையாடினார். அவரிடமிருந்து அபாரமான ஷாட்டுகள் வந்தது. உண்மையில் அவர் விளையாடிய விதத்திற்கு எங்களிடம் பதில் இல்லை. நான் அவருடைய பேட்டிங் அணுகுமுறைக்கு தலை வணங்குகிறேன்”

இதையும் படிங்க : 23 பந்து 65 ரன்.. என் கோச் கேப்டன் என்கிட்ட சொன்னது இது தான்.. அடிச்சு நொறுக்கிட்டேன் – உர்வில் படேல் பேட்டி

“அடுத்து நாங்கள் பேட்டிங் செய்யும்போது முதல் டைம் அவுட்டில் வந்த சஞ்சு சாம்சன் நமக்கு திறமை இருக்கிறது என்றால் இந்த போட்டியை வெல்ல முடியும் என்று கூறினார். இது எங்களுக்கு மிகவும் ஒரு புது வேகத்தை அளிக்கக் கூடியதாக அமைந்தது. இறுதியில் நாங்கள் போட்டியை வென்ற விதம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -