இன்று ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக சிஎஸ்கே வீரர் உர்வில் படேல் சாதனை அரைசதம் அடித்து அசத்தினார். மேலும் இந்த போட்டியில் அவர் தனது பேட்டிங்கில் செய்த மாற்றம் குறித்து பேசி இருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய சிஎஸ்கே அணிக்கு உர்வில் படேல் 13 பந்தில் அரை சதம் அடித்து 23 பந்தில் 68 ரன்கள் எடுத்தார். இதனால் சிஎஸ்கே ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பேட்டிங் பிரச்சனை
உர்வில் படையல் உள்நாட்டில் டி20 கிரிக்கெட்டில் சாதனை சதங்களை அடித்திருக்கிறார். ஆனால் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக அவரால் பெரிய அளவில் பேட்டிங்கில் ஜொலிக்க முடியவில்லை. அவர் அதிரடியாக தொடங்கினால் சில பந்துகளை மட்டுமே சந்தித்து தொடர்ந்து ஆட்டம் இழந்து வந்தார்.
பந்தை பார்த்து பொறுமையாக விளையாடி எடுத்துச் செல்லும் பழக்கம் அவரிடம் இல்லை. மேலும் அவர் நிற்கும் பொழுது நிலையான பேலன்ஸ் இல்லாமல் இருந்து வந்தார். ஆனால் இந்த போட்டியில் எல்லாவற்றையும் சரி செய்து அடித்து நொறுக்கி இருக்கிறார்.
செய்த முக்கிய மாற்றம்
இந்த நிலையில் உர்வில் படேல் தான் பேட்டிங்கில் என்ன மாற்றத்தை செய்தேன், தான் களத்திற்கு வந்த பொழுது கேப்டன் ருதுராஜ் தன்னிடம் என்ன கூறினார்? என்பது பற்றி பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க : உர்வில் படேல் சரித்திர சாதனை.. பல வருடங்கள் கழித்து சாதித்த சிஎஸ்கே.. லக்னாவுக்கு எதிராக பிரம்மாண்ட வெற்றி
இதுகுறித்து உர்வில் படேல்ல் பேசும் பொழுது “நான் அதிரடியாக விளையாட வேண்டும் என்று எந்தத் திட்டத்தையும் வைத்திருக்கவில்லை. சூழ்நிலைக்கு தகுந்தது போல விளையாட வேண்டும் என்று நினைத்தேன். என்னுடைய பயிற்சியாளர் நான் நிற்கும் பொழுது நல்ல பேலன்ஸை ஏற்படுத்திக் கொண்டு பந்தை அடிக்குமாறு கூறினார். என்னுடைய கேப்டன் நான் களத்திற்கு வந்த போது வந்து கொஞ்சம் தாழ்வாக வருவதாக சொன்னார். நான் இதை வைத்து மட்டும்தான் விளையாடினேன்” என்று கூறியிருக்கிறார்.






