கடந்த முறை ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி சரியாக அமையாமல் போனதற்கான காரணம் குறித்து கேப்டன் ருதுராஜ் மிகவும் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
கடந்த முறை 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்கின்ற புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டது. இப்படி இருந்த போது குறைவான சிறந்த வீரர்களே ஏலத்திற்கு வந்தார்கள். ஆனால் அவர்களில் யாரையும் வாங்க சிஎஸ்கே ஆர்வம் காட்டாதது பெரிய பின்னடைவை உருவாக்கியுள்ளது.
கடந்த முறை மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி சரியான வீரர்களை வாங்காததற்கு பயிற்சியாளர் பிளமிங்தான் காரணம் என சிஎஸ்கே ரசிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். எனவே அவரை மாற்றி விட்டு புதிய சிந்தனை கொண்ட புதிய பயிற்சியாளரை கொண்டுவர வேண்டும் என விரும்புகிறார்கள்.
மேலும் அவர் தனிப்பட்ட முறையில் எதையும் வெல்லவில்லை மகேந்திர சிங் தோனி கேப்டன்சி தான் கோப்பைகளை வென்றது என்றும் பொதுவான கருத்து இருக்கிறது. இந்த வருடத்திற்கான மினி ஏலத்திலும் சரியான பந்துவீச்சாளர்களை வாங்கவில்லை என்கின்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.
இதுகுறித்து ருதுராஜ் பேசும் பொழுது “கடந்த வருடம் மெகா ஏலத்தில் எங்களுக்கு நல்ல அணி அமையவில்லை. நான் இப்படி சொல்வது எந்த வீரரையும் அவமதிப்பதற்காக இல்லை. எங்களுடைய அணியில் சரியான இணைப்பு ஏற்படவில்லை. எனவே அடுத்து மினி ஏலத்தில் சிறந்த வீரர்கள் இருக்க மாட்டார்கள். அப்படி கிடைக்கும் வீரர்களை வைத்து நீங்கள் உங்கள் குறைகளை சரி செய்ய பார்ப்பீர்கள். எல்லாம் சரியாக மாறிவிடும் என்று நம்புவீர்கள்”
இதையும் படிங்க : சஞ்சு சாம்சனுக்கு நிகரா பஞ்சாப் டீம்ல யாருமே கிடையாது.. இந்த காரணத்தால அவர் நொறுக்க போறாரு – ஸ்ரீகாந்த் கருத்து
“மெகா ஏலத்தில் நாங்கள் சில நல்ல வீரர்களை தவற விட்டிருக்கலாம். இது ஒரு கற்றல் செயல்முறை. சில நேரம் ஏலம் நமக்கு ஏற்ற வகையில் இல்லாமல் போகலாம். நாம் திட்டமிட்ட விஷயங்கள் நடக்காமல் போகலாம். அவை அணியின் நிலைமையை மாற்றி விடும்” என்று கூறியிருக்கிறார்.