சஞ்சு சாம்சனுக்கு நிகரா பஞ்சாப் டீம்ல யாருமே கிடையாது.. இந்த காரணத்தால அவர் நொறுக்க போறாரு – ஸ்ரீகாந்த் கருத்து

0
2
Sanju

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் பெரிய அளவில் அதிரடியாக விளையாடுவார் என ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்.

சிஎஸ்கே அணிக்கு டிவால்ட் பிரிவிஸ் மற்றும் தோனி இருவரும் காயம் காரணமாக இன்று களம் இறங்க மாட்டார்கள். மேலும் முதல் போட்டியில் மோசமாக தோல்வி அடைந்ததால் அவர்கள் மேல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

அவர் அடித்து நொறுக்குவார்

இந்த போட்டியில் தங்கள் சொந்த மைதானத்தில் வெற்றி பெற்று சிஎஸ்கே அணி நம்பிக்கை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கடந்த சீசனில் இருந்து தற்போது வரை அவர்களுக்கு நல்ல வெற்றிகள் எதுவும் கிடைக்கவில்லை.

இது குறித்து ஸ்ரீகாந்த் பேசும்பொழுது “இந்த போட்டி சேப்பாக்கத்தில் நடக்க இருக்கிறது. டி20 உலகக் கோப்பையில் இன்று தான் முதலில் களமிறங்கி சஞ்சு சாம்சன் பாட்டனார் என்பது வாங்கினார். அவர் தனது உச்சகட்ட பார்ம்க்கு திரும்புவதற்கு சேப்பாக்கம் ஆடுகளம் உதவியாக இருக்கும். முதல் நான்கு ஐந்து பந்துகளை பார்த்த பிறகு அவர் வெறித்தனமாக ஆடுவார். இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியை அடித்து நொறுக்குவார்”

- Advertisement -

சதம் பார்ட்னர்ஷிப் வரும்

“200 ரன் எடுக்கும் அணிதான் வெற்றி பெறும். தற்போது வெற்றி வாய்ப்பு இரு அணிகளுக்குமே சம அளவில் உள்ளது. பஞ்சாப் சிறப்பான அணியாக இருந்தாலும் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் சிஎஸ்கே சிறப்பான அணி. சஞ்சு சிறப்பாக விளையாடினால் அவரை எதிர்கொள்ள பஞ்சாபில் யாருமே கிடையாது”

இதையும் படிங்க : கேகேஆர் இந்த பையன் அடுத்த விராட் கோலி வர முடியும்.. ஆனா அவர்கிட்ட இதை கத்துக்கணும் – சேவாக் அறிவுரை

“சிஎஸ்கே ஓபனிங் ஜோடி 100 ரன் பார்ட்னர்ஷிப் கொண்டு வந்தால் எல்லாம் இயல்பு நிலைக்கு வந்து விடும். ஒரு போட்டியில் தோல்வி அடைந்ததற்காக அணியை மாற்றக்கூடாது. சிவம் துபே நான்காவது இடத்தில் வரவேண்டும் அவர் கீழே செல்லக்கூடாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -