இன்று ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் தோன்றியது. இந்த தோல்வி குறித்து அணியின் கேப்டன் ருதுராஜ் பேசியிருக்கிறார்.
கடந்த ஆண்டு ஆர்சிபி அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி தோல்வி அடைந்ததில் இருந்து, இரு அணி ரசிகர்களும் சமூக வலைதளத்தில் கடுமையாக மோதி வந்தார்கள். இதன் காரணமாக இந்த போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. மேலும் சிஎஸ்கே அணி டாஸ் வென்று பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது.
ஆச்சரியமாக இருந்தது
இந்த போட்டியில் ஆர்சிபி அணிக்கு டிம் டேவிட் 25 பந்தில் 75 ரன்கள் எடுத்தார். அந்த அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணிக்கு சர்பராஸ் கான் 25 பந்தில் 50 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே அணி 213 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதுகுறித்து ருதுராஜ் பேசும் பொழுது “எங்கள் பேட்டிங்கில் பெரிய பங்களிப்பு வந்தது ஆச்சரியமாக இருக்கிறது. சர்ப்ராஸ், ஓவர்டன், பிரசாந்த் மற்றும் துபே எல்லோரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள். ஒருவேளை நான் மேல் வரிசையில் ரன்கள் எடுத்திருந்தால் இந்த போட்டியில் முடிவு மாறியிருக்கலாம்”
ஆட்டம் கைவிட்டு போனது இங்குதான்
“டேவிட் விக்கெட்டை அன்சூல் எடுத்துவிட்டார். ஆனால் அந்தப் பந்து நோபால் ஆக அமைந்துவிட்டது. அது எங்களுக்கு பெரிய துரதிஷ்டமாக அமைந்து விட்டது. அதற்குப் பிறகு டேவிட் மைதானம் எங்கும் பந்தை சிதறடித்தார். அவர் விளையாடியதற்கு நாம் பாராட்டுக்கள் கொடுக்க வேண்டும்”
இதையும் படிங்க : 19 வருட ஐபிஎல் வரலாறு.. சிஎஸ்கேக்கு எதிரா ஆர்சிபி சரித்திர சாதனை.. பெங்களூரில் ருத்ர தாண்டவம்
“நாங்கள் பீல்டிங்கில் எங்கள் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆரம்பத்திலேயே விராட் கோலி ஒரு வாய்ப்பை கொடுத்தார். அதை நாங்கள் பயன்படுத்தி இருந்தால் ஒரு மொமெண்டம் ஆரம்பத்திலேயே கிடைத்திருக்கும். இருந்தபோதிலும் கூட 14 வது ஓவர் வரையில் ஆட்டம் எங்கள் கையில்தான் இருந்தது” என்று கூறியிருக்கிறார்.






