19 வருட ஐபிஎல் வரலாறு.. சிஎஸ்கேக்கு எதிரா ஆர்சிபி சரித்திர சாதனை.. பெங்களூரில் ருத்ர தாண்டவம்

0
5
RCB

இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி சரித்திர சாதனையை படைத்து மெகா இலக்கை நிர்ணயம் செய்திருக்கிறது.

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இரண்டு அணிகளிலும் கடந்த போட்டியில் இருந்து எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.

- Advertisement -

மெதுவான தொடக்கம்

முதலில் பேட்டிங் செய்ய வந்த சிஎஸ்கே அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி பவர் பிளேவில் தாக்குப்பிடித்து விளையாடி 18 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். இவரைத் தொடர்ந்து தடுமாறிய பில் சால்ட் 30 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இவரைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் களம் இறங்கிய தேவ் தத் படிக்கல் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து 29 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

- Advertisement -

ஆர்சிபி சரித்திர சாதனை

இதைத் தொடர்ந்து வந்த கேப்டன் ரஜத் பட்டிதார் இறுதிவரை களத்தில் நின்று 19 பந்துகளில் ஒரு பவுண்டரி ஆறு சிக்ஸர் உடன் 48 ரன்கள், டிம் டேவிட் 25 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் எட்டு சிக்ஸர்களுடன் 70 ரன் குவித்தார்கள். ஆர்சிபி 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்தது.

இதையும் படிங்க : நான் எவ்வளவு கஷ்டப்படுறேனு அவங்களுக்கு தெரியும்.. இனிமே என் பேட்தான் பேசும் – ரிஷப் பண்ட் நெகிழ்வான பேச்சு

ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணிக்கு எதிராக ஒரு போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 231 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த நிலையில் இன்று ஆர்சிபி அணி 250 ரன்கள் எடுத்து புதிய வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது.

- Advertisement -