இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக ஏற்பட்ட படுதோல்வி தங்களுக்கு இனி முன்னேற்றத்தை மட்டுமே கொடுக்கும் என்று நம்புவதாக சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறியிருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே கொத்துக்கொத்தாக விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் சூரியவன்சியின் அதிரடியால் 12.1 ஓவரில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சூழ்நிலை கடினமாக இருந்தது
இதுகுறித்து ருதுராஜ் பேசும் பொழுது “இந்த போட்டியில் தோல்வியடைந்தது பெரிய விரக்தியாக இல்லை. ஆரம்பத்தில் ஆர்ச்சர் மற்றும் பர்கர் இருவரது பந்து வீச்சை சந்தித்து இந்த சூழ்நிலையில் விளையாடுவது மிகவும் கடினமாக இருந்தது. அவர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். இவர்களைத் தொடர்ந்து வந்த மிதவேக பந்துவீச்சாளரை விளையாட முடியவில்லை. ஸ்பின்னர்களுக்கு கூட அவர்களுக்கு உதவி கிடைத்தது”
“நாங்கள் இந்த போட்டியில் இன்னும் கொஞ்சம் திறமையாக செயல்பட்டு இருக்கலாம். போட்டியை இன்னும் ஆழமாக எடுத்துச் சென்று 150 முதல் 170 ரன்கள் எடுத்திருக்கலாம். ஆனால் எது நல்ல ஸ்கோர் என்று இப்போது நம்மால் சொல்ல முடியாது. எனவே ஒரு போட்டியை வெல்ல தொடர்ந்து அதிரடியாக விளையாட வேண்டும். இன்று ஆடுகளம் கொஞ்சம் கடினமாக இருந்ததால் எங்கள் செயல்பாட்டில் ஏமாற்றம் அடையவில்லை”
இந்த தோல்வி நல்லதுக்கே
“எங்களது மறந்துவிட்டு அடுத்த போட்டிக்கு செல்ல வேண்டும். அடுத்த போட்டி மூன்று நாட்களில் உள்ளது. மேலும் அணியில் அனுபவம் இல்லாத நிறைய வீரர்கள் இருக்கிறார்கள். எனவே அவர்கள் கொஞ்சம் பதட்டமாக இருந்திருக்கலாம். எனவே இவ்வளவு தவறு செய்து தோல்வி அடைந்தது நல்லதற்காகத்தான்”
இதையும் படிங்க : மத்தவங்க இந்த ஐபிஎல் எனக்கு கஷ்டமா இருக்கும்னு சொன்னாங்க.. ஆனா என் பிளான் இதுதான் – வைபவ் சூரியவன்சி பேட்டி
“இப்பொழுது ஒரு போட்டியில் அவர்கள் விளையாடி விட்டதால் அவர்களுக்கு இந்த பதட்டம் போய்விடும். இனி முழுதாக முன்னேற்றம் மட்டுமே இருக்கும் என்று நான் நம்புகிறேன். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் பலத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதுதான்” என்று கூறியிருக்கிறார்.






