இன்று சிஎஸ்கே அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வைபவ் சூரியவன்சி 15 பந்தில் தனது அதிவேக அரை சதம் அடித்தார். போட்டிக்குப் பிறகு இது குறித்து அவர் பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 19.4 ஓவரில் ஆல் அவுட் ஆகி 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் 12.1 இரண்டு விக்கெட் இழப்புக்கு எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பிறந்தநாள் கொண்டாடவில்லை
இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய வைபவ் சூரியவன்சி பேசும் பொழுது “நான் இதற்காக எங்கும் வெளியில் செல்லவில்லை. என்னுடைய பிறந்தநாளுக்கு கேக் கட் செய்ய இரவு திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கேக்கை என் மீது பூசுவார்கள் என்கின்ற காரணத்தினால் நான் இரவு சீக்கிரமே உறங்கி விட்டேன்”
“இந்த ஆடுகளம் முதலில் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் பொழுது கொஞ்சம் மெதுவாக இருப்பது போல தெரிந்தது. பிறகு சில ஓவர்கள் விளையாடியதும் பந்து பேட்டுக்கு நன்றாக வர ஆரம்பித்தது. இதனால் நான் என்னுடைய இயல்பில் விளையாட ஆரம்பித்தேன்”
இதுதான் திட்டம் :
“நான் தற்காப்பாக விளையாடுவது பற்றியும் யோசிப்பேன். ஆனால் சிறிய இலக்கை நோக்கி விளையாடும் பொழுது பவர் பிளேவை பயன்படுத்தி அதிரடியாக ரன்கள் எடுத்து விட வேண்டும். இல்லையென்றால் விக்கெட் எடுத்து போட்டிக்கு எதிரணி வந்துவிடும். எனவேதான் அதிரடியாக விளையாடினேன்”
என்னுடைய பயிற்சியாளர்கள் பவுலர்கள் உன்னை தாக்குவார்கள் என்று சொல்லவில்லை. வெளியில் இருப்பவர்கள்தான் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். என்னுடைய அணியில் இருப்பவர்கள் ‘நாங்கள் உன்னை நம்புகிறோம். உன்னுடைய இயல்பான ஆட்டத்தை விளையாட்டு மேலும் சூழ்நிலைக்கு ஏற்றது போலவும் விளையாடு’ என்று சொன்னார்கள்”
இதையும் படிங்க : சிஎஸ்கேவுக்கு எதிராக சாதனை சேஸிங்.. 15 பந்தில் 15 வயது வைபவ் சூரியவன்சியின் ருத்ரதாண்டவம் – ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி
“ஜெய்ஸ்வால் பாய் நான் பேட்டிங் செய்யும்பொழுது எப்பொழுதும் என்னிடம் பேசிக்கொண்டே இருப்பார். எப்போது சிங்கிள் எடுக்க வேண்டும் என்று எனக்கு சொல்லுவார். நான் விளையாட ஸ்டிரைக் கொடுப்பார். மேலும் பந்து நன்றாக வந்தால் என்னை என்னுடைய வழியில் விளையாட சொல்லி ஊக்கப்படுத்துவார்” என்று கூறியிருக்கிறார்.






