இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரிய மகிழ்ச்சி செய்தி.. பிசிசிஐ எடுக்கப் போகும் முக்கிய முடிவு – வெளியான செய்திகள்

0
0

தற்போது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைக்கும் ஒரு முக்கிய விஷயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஈடுபட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

உலகம் முழுவதிலும் டி20 கிரிக்கெட் மிக வேகமாக பரவி வருகிறது. அதனுடைய தலைநகரமாக இந்தியாவும் ஐபிஎல் தொடரும் இருந்து வருகிறது. இந்த நிலையில் இம்பேக்ட் பிளேயர் விதியில் காரணமாக ஐபிஎல் தொடரில் சில காலமாக சுவாரசியம் குறைவாகியுள்ளது.

- Advertisement -

இந்த விதிக்கு எதிராக தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடும் ரோஹித் சர்மா, விராட் கோலி, அக்சர் படேல் போன்ற முன்னணி நட்சத்திர வீரர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் அணி நிர்வாகிகளிடம் இந்த விதி மேற்கொண்டு தொடர வேண்டுமா என்பது குறித்து கேட்டிருக்கிறது. அணி நிர்வாகங்கள் தங்களது கருத்தை தெரிவிப்பதற்கான கடைசி நாளாக இன்று ஆகஸ்ட் 31-ஆம் தேதியை முடிவு செய்திருக்கிறது.

- Advertisement -

கடந்த ஆண்டு இந்த விதி குறித்த அறிவிப்பில் 2027 ஆம் ஆண்டு வரையில் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் திடீரென விதியை நீக்குவதற்காக கருத்து கேட்கப்பட்டு இருக்கிறது. ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதி பெரிய சுவாரசிய குறைப்பை உருவாக்கி இருப்பது. தற்போது இந்த ஆண்டு இந்த விதி நீக்கப்பட்டால் அது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரிய மகிழ்ச்சியாக அமையும்.

- Advertisement -