சாதனை தேவையில்ல.. சுயநலமே இல்லாத ருதுராஜ்.. சிவம் துபேவுக்கு களத்தில் செய்த காரியம்

0
23405
Ruturaj

இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்து இருக்கிறது. சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் போராடி 98 ரன்கள் எடுத்தார். இன்று அவர் சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் அணிக்காக விளையாடியது பலராலும் பாராட்டப்படுகிறது.

இந்த போட்டியிலும் வழக்கம்போல் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் டாஸ் தோற்றார். இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு ரகானே வழக்கம் போல் ஏமாற்றி 12 பந்தில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். துவக்கத்திலேயே இதனால் சிஎஸ்கே அணியின் மீது அழுத்தம் உண்டானது.

- Advertisement -

இதற்கு அடுத்து கேப்டன் ருதுராஜ் உடன் டேரில் மிட்சல் ஜோடி சேர்ந்தார். இந்த முறை இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. டேரில் மிட்சல் 32 பந்தில் 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடி 64 பந்துகளில் 17 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

இதற்கடுத்து இணைந்த ருதுராஜ் மற்றும் சிவந்துபே இருவரும் மீண்டும் அதிரடியில் ஈடுபட்டார்கள். இந்த ஜோடி 35 பந்தில் 74 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடி சாதனை சதம் அடிப்பதை நோக்கி சென்ற ருதுராஜ் 54 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 98 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இந்தப் போட்டியில் ஆட்டத்தின் 19ஆவது ஓவரில் 96 ரன்கள் எடுத்திருந்த பொழுது, ருத்ராஜ் அடித்த பந்து பீல்டரிடம் நேராக சென்றபோதும் கூட, தனது சதத்தைப் பற்றி கவலைப்படாமல், சிவம் துபேவை ஒரு ரன்னுக்கு வேகமாக அழைத்து ஓடினார். அந்த நேரத்தில் உனட்கட் ரன் அவுட் செய்ய தவறிவிட்டார். சிவம் துபே ஸ்ட்ரைக்கில் இருந்தால் சிக்ஸர்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என, தனது சதத்தைப் பற்றி ருதுராஜ் கவலைப்படவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 கிரிக்கெட்டில் சிஎஸ்கே உலக சாதனை.. 2024 ஐபிஎல்-ல் கேப்டனாக ருதுராஜ் மாஸ் ரெக்கார்டு

இதேபோல் அவரால் 98 ரன்னில் இருந்து நேராக சதம் அடிப்பதை நோக்கி சென்று இருக்க முடியும், ஆனால் கடைசி நேரத்தில் ரண்களை முக்கியம் என நடராஜனின் அடிப்பதற்கு கடினமான பந்தை தூக்கி சிக்ஸருக்கு அடிக்க முயற்சி செய்து ஆட்டம் இழந்தார். இன்றைய போட்டியில் சதமடித்திருந்தால் அவருக்கு ஒட்டுமொத்தமாக மூன்றாவது சதமாகும். சிஎஸ்கே வரலாற்றில் அந்த அணிக்காக மூன்று சதம் அடித்தவர்கள் யாருமே கிடையாது. இப்படிப்பட்ட வரலாற்று சாதனையை மதிக்காமல் அணிக்காக விளையாடி ஆட்டம் இழந்து, சதத்தையும் இழந்து இருக்கிறார். இதை தற்போது எல்லோரும் பாராட்டி வருகிறார்கள்.