அந்த ரெண்டு ஓவர் மட்டும் கொஞ்சம் ரன் வந்து இருந்தா.. மீதி எட்டு ஓவர்ல சும்மா ஜெயிச்சிருப்போம்.. மோசம் பண்ணிட்டாங்க – ருதுராஜ் வருத்தம்

0
12
Ruturaj

நேற்று ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேசியிருக்கிறார்.

முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 9 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 194 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய சிஎஸ்கே அணி 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. முதல் 10 ஓவர்களில் 110 ரன்கள் எடுத்திருந்த சிஎஸ்கே அணி, அடுத்த பத்து ஓவர்களில் மோசமாக விளையாடி போட்டியை தோற்றது.

- Advertisement -

சிஎஸ்கே சொதப்பல்

ஒரு பக்கத்தில் சர்ப்ராஸ் கான் சிறப்பாக விளையாட, இன்னொரு பக்கத்தில் மேத்யூ ஷார்ட் மிகவும் மெதுவாக விளையாடினார். இதனால் சர்ப்ராஸ் கான் அழுத்தம் ஏற்பட்டு அடிக்கச் சென்று விக்கெட்டை இழந்தார்.

அடுத்து பிரிவிஸ் மற்றும் சிவம் துபே இருவரும் மோசமான ஷாட் விளையாடி ஆட்டம் இழந்தார்கள். இதன் காரணமாக சிஎஸ்கே அணியால் எளிதான இலக்கை விரட்டி பிடிக்க முடியாமல் தோல்வி அடைந்தது. வெல்ல வேண்டிய போட்டியை தோற்றது சிஎஸ்கே அணிக்கு பின்னடைவை உருவாக்கி உள்ளது.

- Advertisement -

இந்த ஓவர்களே காரணம்

இதுகுறித்து ருதுராஜ் பேசும்போது “ஹைதராபாத் ஒரு கட்டத்தில் 220 முதல் 230 ரன்கள் எடுக்கும் இடத்தில் இருந்தது. அங்கிருந்து அவர்களை 190 ரன்னுக்கு கொண்டு வந்தது மிகப்பெரிய விஷயம். எந்த நாளாக இருந்தாலும் இந்த ரன்னை நான் எடுத்துக் கொண்டிருப்பேன். எங்களுடைய பவுலிங் யூனிட் கடந்த மூன்று போட்டிகளாக மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது”

இதையும் படிங்க : எல்லாமே முடிஞ்சு.. மாத்ரேவின் காயம் ரொம்ப மோசமா இருக்கு.. துரதிர்ஷ்டவசமா இது பெரிய இழப்பு – சிஎஸ்கே பேட்டிங் கோச் வருத்தம்

“நாங்கள் முதல் 10 ஓவரில் சிறப்பாக விளையாடியிருந்தோம். அடுத்த 10 ஓவரில் 80 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் அங்கிருந்து அடுத்த இரண்டு ஓவர்களுக்கு வெறும் நான்கு ரன்கள் மட்டுமே வந்தது. இப்படி சென்றால் நீங்கள் கடைசி கட்டத்தில் ஓவருக்கு 12 முதல் 13 ரன்கள் எடுக்கும்படி ஆகும். எனவே இந்த இரண்டு ஓவர்கள் தான் எங்கள் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -