நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் சிஎஸ்கே 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த சூழ்நிலையில் சென்னை அணி வெற்றி பெற்ற விதம் குறித்து அதன் கேப்டன் எம்எஸ் தோனி சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இந்த போட்டியை பொருத்தவரை முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி 49 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். பந்துவீச்சில் ஜடேஜா சிறப்பாக விளையாடி 2 விக்கெட் கைப்பற்றினார்.
இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்து தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் அதிகபட்சமாக சிவம் டுபே 43 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். இதுவரை 5 போட்டிகளில் தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து சிஎஸ்கே அணிக்கு இந்த வெற்றி பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.
இந்த சூழ்நிலையில் வெற்றி குறித்து எம்.எஸ். தோனி கூறும் போது “ஆட்டத்தில் வெற்றி பெறுவது என்பது மிகவும் நல்லது. நீங்கள் விளையாடும் போது எப்போதுமே வெற்றி பெற விரும்புவீர்கள். முந்தைய போட்டிகளில் நான் நினைத்தது போல வெற்றி நமக்கு அமையவில்லை. இந்த வெற்றி தற்போது மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. மற்றும் நாம் மேம்படுத்த விரும்பும் பகுதிகளில் முன்னேற உதவுகிறது. கிரிக்கெட்டில் நமக்கு எதுவுமே நன்றாக நடக்காத போது கடவுள் அதை கடினமாக்குவார் என்று நம் அனைவருக்குமே தெரியும். பவர் பிளேவாக இருந்தாலும் சரி, சூழ்நிலையாக இருந்தாலும் சரி, கூட்டணியாக இருந்தாலும் சரி நாங்கள் பந்தை கையாளுவதில் சிரமப்பட்டோம்.
இதையும் படிங்க:வெற்றி மந்திரத்தை கண்டறிந்த தோனி.. அறிமுகப் போட்டியில் அசத்திய சிஎஸ்கே வீரர்.. பினிஷிங்கில் அசத்திய தூபே.. 5 விக்கெட்டில் லக்னோ தோல்வி
மேலும் சிறப்பான தொடக்கத்தை பெற முடியவில்லை. விக்கெட்டுகளும் ஒரு பக்கத்தில் வீழ்ந்து கொண்டே இருந்தது. தவறான நேரத்தில் தொடர்ந்து விக்கெட்டுகளில் வீழ்ந்து கொண்டிருந்தோம். நாங்கள் சொந்த மண்ணில் இருந்து வெளியே விளையாடும் போது ஒரு பேட்டிங் பிரிவாக எங்கள் அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது. நாங்கள் அஸ்வின் மீது நிறைய அழுத்தம் கொடுத்தோம். முதல் 6 போட்டிகளில் அவர் 2 ஓவர்கள் மட்டுமே வீசினார். எனவே பந்துவீச்சில் இன்னும் சிறப்பாக முன்னேற தேவையான மாற்றங்களை செய்தோம். அது இந்த போட்டியில் நன்றாகவே பலன் அளித்தது. இந்தப் போட்டியில் ஷேக் ரசீத் சிறப்பான ஆட்டத்தை விளையாடினார். வலையிலேயே அவர் வேகம் மற்றும் சுழல் என இரண்டு விதமான பந்துவீச்சு தாக்குதலையும் எதிர்கொண்டு சிறப்பாக விளையாடினார் இது அவருக்கு வெறும் ஆரம்பம் மட்டுமே. இன்றும் கூட எனக்கு ஏன் ஆட்டநாயகன் விருது கொடுத்தார்கள் என்று புரியவில்லை. நூர் அகமது இந்த போட்டியில் நன்றாக பந்து வீசினார்” என்று பேசியிருக்கிறார்