43 வயதில் கேப்டன் தோனி படைத்த மாபெரும் சாதனை.. ஐபிஎல் வரலாற்றில் யாருக்குமே இது மாதிரி நடந்ததில்ல.. முழு விபரம்

0
214

நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த சூழ்நிலையில் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் வரலாற்றில் எந்த ஒரு கேப்டன் செய்யாத மாபெரும் சாதனையை படைத்திருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் தோனி சாதனை

நேற்று லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் குவித்தது. வழக்கமாக மிச்சல் மார்ஸ் மற்றும் நிக்கோலஸ் பூரான் ஆகியோர் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் நேற்றைய போட்டியில் குறைந்த ரன்களில் வெளியேறினார்கள்.

இந்த சூழ்நிலையில் வெற்றி இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கிய போது தொடக்கம் ஓரளவு நன்றாக அமைந்தாலும் அதற்குப் பிறகு மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் வரிசையாக ஆட்டம் இழந்தனர். 111 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் அதற்கு பின்னர் சிவம் துபே உடன் ஜோடி சேர்ந்து எம்எஸ் தோனி இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடி போட்டியை சென்னை அணியின் பக்கம் திருப்பினார். இக்கட்டான சூழ்நிலையில் களம் இறங்கிய தோனி 11 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 4 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸ் என 26 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.

- Advertisement -

விராட் கோலியின் சாதனை சமன்

இதனால் சிஎஸ்கே 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் இறுதிக்கட்டத்தில் 26 ரன்கள் குவித்து சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய எம்எஸ் தோனி ஆட்டநாயகன் விருதை வென்றார். இதன் மூலமாக 43 வயதான எம்எஸ் தோனி ஐபிஎல் வரலாற்றில் ஆட்டநாயகன் விருதை வென்ற மிக வயதான வீரர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும் அதிக வயதில் ஆட்டநாயகன் விருதை வென்ற கேப்டன் ஆகவும் வீரராகவும் எம்எஸ் தோனியே இருந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அஸ்வினுக்கு இதனால்தான் வாய்ப்பு கொடுக்கல.. இது அந்த பையனுக்கு வெறும் ஆரம்பம் மட்டுமே – வெற்றி குறித்து எம்எஸ் தோனி

மேலும் அதிக முறை ஆட்டநாயகன் விருதை வென்ற இந்திய வீரர்களின் பட்டியலில் எம்எஸ் தோனி விராட் கோலியின் சாதனையை சமன் செய்து இருக்கிறார். இதுவரை விராட் கோலி 18 முறை ஆட்டநாயகன் விருதை வென்ற நிலையில் நேற்றைய போட்டியின் மூலமாக எம்எஸ் தோனி இந்த சாதனையை சமன் செய்து தற்போது இந்த பட்டியலில் இவர்கள் இருவரும் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்கள். 19 முறை வென்ற ரோஹித் சர்மா இந்த பட்டியலில் முதல் இடத்திலும் 16 முறை விருதை வென்ற யூசுப் பதான் மற்றும் ஜடேஜா ஆகியோர் மூன்றாவது வரிசையிலும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -