“இந்த வீரர் அணியில் இருந்தால் சிஎஸ்கே ஃபேர்-ப்ளே அவார்டை வாங்கவே முடியாது” – தோனி சொன்ன ரகசியம்!

0
3135
Dhoni

நேற்றுடன் ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு ஓய்வு பெற்றுக் கொண்டு இருக்கிறார்!

சென்னை அணி இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு திரும்பி வந்து கோப்பையை வென்ற 2018 ஆம் ஆண்டு அணிக்குள் வந்த அம்பதி ராயுடு, மகேந்திர சிங் தோனியால் துவக்க ஆட்டக்காரராக அனுப்பப்பட, அங்கிருந்து எல்லாம் மாறி, அந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தைச் சென்னை சூப்பர் கிங்ஸ் கைப்பற்ற இவர் முக்கிய காரணமாக விளங்கினார்.

- Advertisement -

பேட்டிங்கில் மட்டும் அதிரடியாக செயல்படுபவராக இல்லாமல், களத்திலும் ஆக்ரோஷம் நிறைந்த வீரராகவே வெளிப்படக்கூடியவர். எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் அவர் தன்னிடம் முறைத்தால், திருப்பி அவர் சொந்த அணியின் வீரராக இருந்தாலும் முறைத்துக் கொள்ளக் கூடியவர்.

இவரது இந்த ஆக்ரோஷமான நடவடிக்கையே அவருக்கு கிரிக்கெட் வாழ்க்கையில் பல பின்னடைவுகளை உருவாக்கி இருக்கிறது. ஆனாலும் அம்பதி ராயுடு தன் இயல்பை விட்டு எந்த இடத்திலும் நடிக்காமல் தன் உழைப்பை மட்டுமே நம்பி இயங்கியவர்.

இந்த நிலையில் நேற்று அம்பதி ராயுடு குறித்து பேசிய மகேந்திர சிங் தோனி
“அம்பதி ராயுடு களத்தில் இருக்கும் பொழுது 100% எப்பொழுதும் கொடுப்பார். ஆனால் அவர் அணியில் இருப்பதால் எங்களால் ஒருபொழுதும் பேர்-ப்ளே அவார்டை வெல்ல முடியாது!” இன்று அவரது ஆக்ரோஷமான நடவடிக்கையைக் குறித்து நகைச்சுவையாகக் கூறினார்.

- Advertisement -

அவரைப் பற்றி தொடர்ந்து பேசிய மகேந்திர சிங் தோனி ” அவர் எப்பொழுதும் பங்களிக்க விரும்புகிறார் மேலும் அவர் ஒரு அற்புதமான வீரர். இந்தியா ஏ சுற்றுப்பயணத்தில் இருந்து நான் அவருடன் விளையாடி வருகிறேன். அவர் சூழல் மற்றும் வேகம் இரண்டையும் திறமையாகச் சமமாக விளையாட கூடியவர்.

அவர் மிகவும் சிறப்பாக ஏதாவது ஒன்றைச் செய்வார் என்று நான் உணர்ந்தேன். நான் அவரை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கேம் அவரது நினைவில் எப்பொழுதும் இருக்கும்.

அவரும் என்னைப் போன்றவர். மொபைலை அடிக்கடி பயன்படுத்த மாட்டார். முக்கியமான விஷயம் என்னவென்றால் அவர் ஒரு அற்புதமான வாழ்க்கையைக் கொண்டிருக்கிறார். மேலும் அவர் தனது அடுத்த கட்ட வாழ்வை அனுபவிப்பார் என்று நம்புகிறேன்!” என்று கூறியுள்ளார்!