நடப்பு ஐபிஎல் தொடரில் திடீரென சிஎஸ்கே அணி நிர்வாகம் மும்பையை சேர்ந்த இளம் வீரர் ஒருவரை சோதனைக்கு அழைத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் அணியில் இணைகிறாரா என்பது குறித்து சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் பதில் அளித்திருக்கிறார்?
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி எதிர்பார்த்ததைவிட மிகவும் சுமாராக காணப்படுகிறது. அவர்களுடைய பேட்டிங் ஃபயர் பவர் இல்லாமல் இருக்கிறது. இதன் காரணமாக நிறைய விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பதால் திடீரென மும்பையை சேர்ந்த இளம் பேட்ஸ்மேன் ஒருவரை அழைத்திருப்பதாக தெரிகிறது.
என்ன நடந்து கொண்டிருக்கிறது?
சிஎஸ்கே அணியில் தொடக்க ஆட்டக்காரராக கான்வேவை களம் இறக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் சிஎஸ்கே நிர்வாகம் எப்படியாவது ஒரு இந்திய வீரரை தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்க வேண்டும் என்று நினைக்கிறது. காரணம் ஒரு வெளிநாட்டு வேகப்பந்து வைத்து ஆல் ரவுண்டர் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும் என்று யோசிக்கிறது.
இதன் காரணமாகவே தற்பொழுது மும்பையை சேர்ந்த இளம் இடது கை தொடக்க ஆட்டக்காரர் 19 வயதான ஆயுஸ் மத்ரேவை திடீரென சிஎஸ்கே அணி நிர்வாகம் சோதனைக்கு அழைத்திருக்கிறது. இன்று அவர் சிஎஸ்கே சோதனை முகாமில் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இதற்கான காரணம் குறித்தும் அவர் அணியில் இணைகிறாரா? என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் பதில்
இந்த நிலையில் இது குறித்து பதில் அளித்து இருக்கும் சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் கூறும்பொழுது ” ஆமாம் நாங்கள் அந்த வீரரை சோதனை முகமுக்கு அழைத்திருக்கிறோம். அவர் எங்களது திறனறியும் குழுவைக் கவர்ந்திருக்கிறார். எனவேதான் அவர் திறமையை பரிசோதிக்க அழைத்திருக்கிறோம். மேலும் தற்போது எங்கள் குழுவில் யாருக்கும் காயம் இல்லை. அப்படி ஏதாவது தேவைப்பட்டால் அவரை அணியில் சேர்க்க முன்கூட்டியே சோதனையை நடத்துகிறோம்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : சிராஜ் செஞ்சது விராட்டுக்கு இல்ல அந்த பெரிய மனுசனுக்கு.. நான் எதிர்பார்த்தது இதுதான் – சேவாக் பாராட்டு
இவர் ஏற்கனவே தோனியால் சிஎஸ்கே சோதனை முகாமுக்கு அழைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பொழுது வந்துவிட்டு சென்ற அவரை சிஎஸ்கே அணி நிர்வாகம் ஏலத்தில் மீண்டும் வாங்கவில்லை. தற்போது ஏலத்தில் இருந்த சிறந்த இளம் வீரர்களை எல்லோரையும் தவறவிட்ட பிறகு, சிஎஸ்கே ரசிகர்கள் விமர்சனம் செய்கின்ற காரணத்தினால் திடீரென இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று இணையத்தில் மீண்டும் விமர்சனம் வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.






