நடப்பு ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி துஷார் தேஸ்பாண்டே விஷயத்தில் தவறு செய்து இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணியால் தப்பித்துக் கொண்ட சம்பவம் நடைபெற்றது.
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் எல்லா அணிகளும் சரிசமமாக போட்டியிட்டு வருகின்றன. ஏறக்குறைய எல்லா அணிகளுமே சம பலத்தில் இருக்கின்றன. ஆனால் இந்திய வேகப்பந்து வீச்சாளர் விஷயத்தில் சிஎஸ்கே அணி கொஞ்சம் பின்னடைவை சந்தித்தது.
சிஎஸ்கே அணி நேற்று ஏலத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளரை வாங்க வேண்டியது கலில் அகமதை மட்டும் வாங்கி இருந்தது. ஏற்கனவே அணியில் பதிரனா, கான்வே, ரச்சின் ரவீந்தரா மற்றும் நூர் அகமது ஆகியோர்கள் இருந்தார்கள்.
எனவே குறிப்பிடும்படியான இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை வாங்கினால் மட்டுமே மேலே இருக்கும் நான்கு வெளிநாட்டு வீரர்களையும் பிளேயிங் லெவனில் பயன்படுத்த முடியும் என்கின்ற நிலைமை இருந்தது. இந்த நிலையில் மீண்டும் சிஎஸ்கே அணி குறைந்த விலைக்கு கிடைத்ததால் சாம் கரனை வாங்கியது.
இந்த நிலையில் ஓரளவுக்கு அனுபவம் இருக்கும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை வாங்க வேண்டி இருந்தது. இந்த நிலையில் துஷார் தேஷ்பாண்டேவை 6 கோடி ரூபாய் சென்று அதற்கு மேல் கேட்காமல் ராஜஸ்தானிடம் விட்டுக் கொடுத்தது. சிஎஸ்கே அணியின் கையில் அப்பொழுது 13 கோடி ரூபாய்க்கு மேல் பணம் இருந்தது. மற்ற அணிகளை விட ஓரளவுக்கு அதிகமாகவே இருந்தது. மேலும் வெளியில் அனுபவ இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை.
இதையும் படிங்க : விராட் கோலிக்கு நாங்க தேவையில்ல.. அவரிடத்துல உங்களால இதை பண்ண முடியாது – பும்ரா பேச்சு
இந்த நிலையில் திடீரென சிஎஸ்கே அணி சிக்கிக்கொண்டது. இந்த நிலையில் அன்சுல் காம்போஜ் ஏலத்திற்கு வந்தார். தங்கள் வீரரை மீண்டும் வாங்க மும்பை களம் இறங்கியது. எனவே மும்பை வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிஎஸ்கே 3.40 கோடிக்கு ஏலம் கேட்க அவர்கள் விலகி விட்டார்கள். இதன் காரணமாக சிஎஸ்கே அணிக்கு அன்சுல் காம்போஜ் கிடைத்தார். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணியால் சிஎஸ்கே தப்பித்துக் கொண்டது!