விராட் கோலிக்கு நாங்க தேவையில்ல.. அவரிடத்துல உங்களால இதை பண்ண முடியாது – பும்ரா பேச்சு

0
30
Virat

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பும்ரா இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் மிக முக்கியமான கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மேற்கு ஆஸ்திரேலியா பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட கேப்டன் பும்ரா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

- Advertisement -

ரிக்கி பாண்டிங் விமர்சனத்திற்கு பதிலடி

இந்திய அணியின் ஆஸ்திரேலியா டெஸ்ட் சுற்றுப்பயணத்தின் ஆரம்பத்தில் விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாக இரண்டு மூன்று டெஸ்ட் சதங்கள் மட்டுமே அடித்திருப்பதாகவும், இதுவே வேறு ஒரு அணியாக இருந்தால் அவரை நீக்கி இருப்பார்கள் என ரிக்கி பாண்டிங் கூறியிருந்தார்.

பிறகு இது குறித்து கம்பீரிடம் கேட்ட பொழுது ரிக்கி பாண்டிங் இந்திய கிரிக்கெட் குறித்து பேசக்கூடாது ஆஸ்திரேலியா கிரிக்கெட் குறித்து பேச வேண்டும் என சூடாக பதில் அளித்து இருந்தார். இதற்குப் பிறகு இந்த விவகாரம் பெரிய அளவில் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களால் விவாதிக்கப்பட்டது. இதன் காரணமாக விராட் கோலி திடீரென பேச்சு பொருளாக தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே மாறினார். இந்த நிலையில் முதல் டெஸ்டில் சதம் அடித்து எல்லாவற்றுக்கும் பதிலடி கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலிக்கு நாங்கள் தேவையில்லை

இந்த நிலையில் விராட் கோலி குறித்து பேசி இருக்கும் பும்ரா கூறும் பொழுது “விராட் கோலிக்கு நாம் தேவையில்லை, நமக்குத்தான் விராட் கோலி தேவை என நான் பலமுறை கூறியிருக்கிறேன். அவர் மிகவும் அனுபவம் மிக்க ஒரு வீரர். அவருக்கு இது நான்காவது அல்லது ஐந்தாவது சுற்று பயணமாக இருக்கலாம். அதனால் அவருடைய பேட்டிங் திறமை எப்படி சிறப்பாக இருக்கும் என எல்லோருக்கும் தெரியும்”

“விராட் கோலியின் இடத்தில் நீங்கள் இருந்து இவ்வளவு நாள் விளையாடினால் உங்களுக்கு சிறப்பாக தொடர்ந்து விளையாடுவது மிக கடினமாகிவிடும். ஆனால் எப்பொழுதும் சிறப்பாக விளையாடுவதை பார்த்துக் கொண்டு இருந்தார். வெளிப்படையாக அவர் முதல் இன்னிங்ஸில் ஒரு சிறந்த பந்தில் ஆட்டம் இழந்து விட்டார்”

இதையும் படிங்க: 7 ரன்னில் ஆல் அவுட்.. ஆண்கள் சர்வதேச டி20 வரலாற்றில் மோசமான சாதனை.. டி20 உலக கோப்பை தகுதி சுற்று

“எங்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டிய ஒரு அனுபவ வீரர் தேவைப்பட்டார். அந்த இடத்தில் அவர் நன்றாக விளையாடுகிறார். மேலும் அவர் மற்றவர்களை சுதந்திரமாக பேட்டிங் செய்ய அனுமதிக்கிறார். தொடரின் தொடக்கத்தில் விராட் கோலி போன்ற ஒருவர் சிறப்பாக விளையாட ஆரம்பித்தால் அதைவிட பெரிதாக நீங்கள் எதையும் கேட்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -