சிஎஸ்கே வலிமையா எல்லாம் இல்ல.. இந்த பிரச்சனைகள் தீரவே இல்ல.. இதான் உண்மை – அனிருதா ஸ்ரீகாந்த் பேச்சு

0
126
Srikanth

நேற்று ஐபிஎல் மினி ஏலம் நடந்து முடிந்துள்ள நிலையில் சிஎஸ்கே அணி இன்னும் பலவீனமாகவே இருப்பதாக அனிருதா ஸ்ரீகாத் விமர்சனம் செய்திருக்கிறார்.

2026 ஆம் ஆண்டு 19வது ஐபிஎல் சீசனுக்கு நேற்று மினி ஏலம் நடத்தப்பட்டது. வழக்கமாக அனுபவ வீரர்கள் மேல் முதலீடு செய்யும் சிஎஸ்கே இந்த முறை இளம் வீரர்கள் மேல் பெரிய அளவில் முதலீடு செய்து ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

- Advertisement -

சிஎஸ்கே கோட்டை விட்ட இடம்

சிஎஸ்கே இந்த முறை அன் கேப்டு இந்திய வீரர்கள் கார்த்திக் சர்மா மற்றும் பிரசாந்த் வீர் இருவருக்கும் தலா 14.20 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. இது ஐபிஎல் வரலாற்றில் அன்கேப்டு வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட மிக அதிகபட்ச தொகையாக இருக்கிறது.

அதே சமயத்தில் தற்போதைய பவுலிங் யூனிட்டில் முஸ்தஃபிஷர் ரஹ்மான் மிகவும் தேவையான ஒருவராக சிஎஸ்கேவுக்கு இருந்தார். ஆனால் இன்னும் சில கோடிகள் ஏலத்தில் மேலே சென்று அவரை வாங்க முயற்சி செய்யாமல் சிஎஸ்கே விட்டது. இதன் காரணமாக கலில் அகமத் மற்றும் நாதன் எல்லீஸ் இருவருக்கும் சரியான மாற்றுவீரரும் இல்லை, இவர்களுடன் இணைந்து விளையாடவும் சரியான வீரர் இல்லை என்பது பின்னடைவை கொடுக்கிறது.

- Advertisement -

இதுதான் உண்மை

இதுகுறித்து அனிருதா ஸ்ரீகாந்த் பேசும் பொழுது ” சிஎஸ்கே என்பதற்காக பொய் சொல்ல முடியாது. அவர்களுடைய பவுலிங் யூனிட் இப்பொழுதும் வலிமை இல்லாமலே இருக்கிறது. அவர்கள் ஏலத்தில் முஸ்தஃபீஸூருக்கு இன்னும் கொஞ்சம் சென்று வாங்கி இருக்க வேண்டும். தற்பொழுது அவர்களுடைய பிரதான வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மாற்று வீரர் இல்லை. கடந்த முறை பேட்டிங் சரியில்லாமல் மட்டுமே தோற்கவில்லை, பவுலிங்கும் சரியில்லை”

இதையும் படிங்க: தெஆ 4வது டி20.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. 2 ஸ்டார் வீரர்கள் வெளியேற்றம்.. என்ன செய்வார் கம்பீர்?

“மேலும் தற்போது இரண்டு அன் கேப்டு வீரர்கள் பெரிய விலைக்கு வாங்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் இன்னும் ஐபிஎல் தொடரில் தங்களை நிரூபிக்காதவர்கள். மேலும் இவர்கள் இருவரும் ஒரே பிளேயிங் லெவனில் இடம்பெற முடியுமா? என்கின்ற கேள்வியும் இருக்கிறது. எனவே இதில் ஒருவருக்கு செலவு செய்த பணத்தை, பவுலிங் யூனிட்டை வலிமையாக்குவதற்கு செலவு செய்திருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -