ஐபிஎல் 2025

திடீரென பயிற்சியை நிறுத்திய தோனி.. ஓய்வை அறிவிக்கும் நிலையில் இருக்கிறாரா.? பவுலிங் கோச் வெளியிட்ட முக்கிய தகவல்

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாட உள்ளன.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்த போட்டிக்கு தயாராகுவதற்கு முன்பாக எம் எஸ் தோனி பயிற்சியை புறக்கணித்த விதம் குறித்து சிஎஸ்கே பவுலிங் கோச் எரிக் சைமன்ஸ் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

கொல்கத்தா சென்னை மோதல்

கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னை அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற நிலையில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தனது கேப்டன் பதவியை விட்டு விலகுவதாக எம்எஸ் தோனி அறிவித்தார். இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இன்னும் ஒரு ஆண்டு விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு எம்எஸ் தோனி ஐபிஎல் தொடரில் விளையாட தயாரானார்.

ஆனால் இந்த வருடம் சரியான வீரர்கள் தேர்வு செய்யாததால் சென்னை அணி தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் காயம் காரணமாக கேப்டன் ருத்ராஜ் சீசனை விட்டு வெளியேற, அவருக்கு பதிலாக எம்எஸ் தோனி மீண்டும் பொறுப்பேற்று அணியை தாங்கி வருகிறார். இந்த சூழ்நிலையில் அடுத்த ஆண்டுக்கான சரியான பிளேயிங் லெவனை அமைக்க தோனி திட்டமிட்டு வருவதாகவும் அனைத்து இடங்களையும் நிரப்ப தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானது. அதேபோல கொல்கத்தா மைதானம் தோனிக்கு மிகவும் பிடித்தமானது என்பதால் இந்த போட்டிக்கு பிறகு அவர் விளையாட மாட்டார் என்ற வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் திடீரென்று தனது பயிற்சியை நிராகரித்தார் என்ற செய்திகள் வெளியானது.

- Advertisement -

பயிற்சியை நிராகரித்த தோனி

இந்த சூழ்நிலையில் எம்எஸ் தோனி இந்த போட்டியோடு ஓய்வு பெறுகிறாரா? அல்லது அவருக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டுள்ளதா? என்பது போன்ற குழப்பங்கள் ரசிகர்களிடையே ஏற்பட்ட நிலையில் அது குறித்து தற்போது பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் சைமன்ஸ் தோனி குறித்த விரிவான தகவல்களை கூறி இருக்கிறார். எம்எஸ் தோனி தற்போது நலமாக இருக்கிறார் எனவும், அவர் இந்த போட்டியில் விளையாட ஏற்கனவே தயாராக இருக்கும் பட்சத்தில் தான் பயிற்சியின் நிராகரித்தார் எனவும் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:டி20யில் இது ஒரு பெரிய தப்பு.. நானும் தீபக் சஹாரும் செஞ்ச வேலைதான் எங்க தோல்விக்கே முக்கிய காரணம் – கேப்டன் ஹர்திக் பாண்டியா

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “எம்எஸ் தோனி இன்று விளையாடுவார் என எதிர்பார்க்கலாம். அவரைப் பொறுத்தவரையில் ஆட்ட சூழ்நிலை என்ன என்பது குறித்து அவருக்கு நன்றாக தெரியும். தற்போது எந்த நிலையில் இருக்கிறார் என்பதையும் நன்கு அறிவார். ஒரு போட்டிக்கு முன்பாக அவர் தன்னை தயார்படுத்திக் கொள்ள கடுமையாக உழைப்பார். பின்னார் அவர் இருக்கும் இடத்தில் தன்னை தயார்படுத்திக் கொள்வதால் தனது பயிற்சிகளை குறைத்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறார். அதனால் எந்த பிரச்சினையும் கிடையாது அவர் இப்போது தயாராக இருக்கிறார் எப்போது தயாராக இல்லை என்பது அவருக்குத் தெரியும்” என பேசி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts