கோட்டைக்கே வந்து எங்களை அடிக்க முடியுமா…. முதல்முறையாக குஜராத்தை வீழ்த்தி பைனலுக்குள் கால் வைத்தது சிஎஸ்கே!

0
2463

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி முதல் அணியாக பைனலுக்குள் காலடி வைத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

2023 ஐபிஎல் சீசனில் லீக் போட்டிகள் முடிவடைந்து குவாலிபயர் சுற்றை எட்டியுள்ளது. புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்கள் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் முதல் குவாலிபயர் போட்டியில் மோதின.

- Advertisement -

இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா முதலில் பவுலிங் செய்கிறோம் என்று அறிவித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வழக்கம் போல கான்வே மற்றும் ருத்துராஜ் இருவரும் ஓப்பனிங் செய்தனர். இவர்களின் பாட்னர்ஷிப் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

முதல் விக்கெட்டிற்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ருத்துராஜ் 44 பந்துகளுக்கு 60 ரன்கள் அடித்தார். டெவான் கான்வே 40 ரன்கள் அடித்தார். ரகானே, ராயுடு இருவரும் தலா 17 ரன்கள் அடித்தனர்.

கடைசியாக வந்த ஜடேஜா முக்கியமான கட்டத்தில் 22 ரன்கள் அடைக்க 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் அடித்தது.

- Advertisement -

இலக்கை சேஸ் செய்த குஜராத் அணிக்கு சகா 12 ரன்களுக்கு அவுட்டாகி சொதப்பலான துவக்கம் கொடுத்தார். மிடில் ஓவரில் வந்தவர்கள் ஹர்திக் பாண்டியா 8 ரன்கள், சனக்கா 14 ரன்கள் அடித்து அவுட்டாகினர்.

அதிரடியாக ஆடி சிஎஸ்கே அணிக்கு தலைவலியை கொடுப்பார் என பார்க்கப்பட்ட மில்லர் 4 ரன்களுக்கு ஜடேஜா பந்தில் போல்டானார். ராகுல் திவாட்டியா 3 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறியபோது, 98 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்து குஜராத் அணி தடுமாறியது.

அபாரமான பார்மில் இருந்த சுப்மன் கில் இன்றைய போட்டியிலும் நிலைத்து நின்று சிஎஸ்கே அணியை அச்சுறுத்தி வந்தார். அப்போது உள்ளே வந்து பவுன்சர் வீசி கில் விக்கெட்டை எடுத்துகொடுத்தார் தீபக் சஹர். கில் 42 ரன்களுக்கு அவுட்டானார்.

அடுத்து உள்ளே வந்த ரஷித் கான் உடன் சிறிது நேரம் பார்ட்னர்ஷிப் அமைத்த விஜய் சங்கர் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 7ஆவது விக்கெட்டுக்கு 38 ரன்கள் அடித்தது.

16 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகள் உட்பட 30 ரன்கள் அடித்து ஆட்டம்காட்டினார் ரஷித் கான். ரன்களை வாரிக்கொடுத்தாலும் சரியான நேரத்தில் ரஷித் கான் விக்கெட்டை தூக்கினார் துஷார் தேஷ்பாண்டே.

குஜராத் அணியை 157 ரன்களுக்கு ஆல்அவுட் செய்த சிஎஸ்கே அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக குஜராத் அணியை வீழ்த்துகிறது சிஎஸ்கே. முதல் அணியாக இந்த வருட பைனலுக்கு முன்னெறியுள்ளது.